Last Updated : 09 Sep, 2018 02:22 PM

 

Published : 09 Sep 2018 02:22 PM
Last Updated : 09 Sep 2018 02:22 PM

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு சிறப்புத் திட்டம்: சென்னை, டெல்லி உட்பட 8 நகரங்களில் பெண்கள் போலீஸ் ரோந்து படைகள்; ரூ.3000 கோடியை ஒதுக்கியது மத்திய உள்துறை

நகரங்களில் பெண்களின் பாது காப்பை உறுதி செய்வதற்கு, சென்னை, டெல்லி உட்பட 8 முக்கிய நகரங்களில் முதல்கட்டமாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இடம்பெறும் போலீஸ் ரோந்துப் படை உருவாக்கப்பட உள்ளது. இது தவிர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3000 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதி கரித்து வருகின்றன. இதுதொடர் பாக கடந்த 2015-ம் ஆண்டு 3,29,243 புகார்கள் பதிவாயின. இந்த எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு 3,38,954 ஆக அதிகரித் துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு நாட்டில் 34,651 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த எண் ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு 38,947 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017-ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாது காப்பை உறுதி செய்ய, ‘பெண் களுக்குப் பாதுகாப்பான நகரம்’ என்ற சிறப்பு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இத் திட்டத்தின் கீழ் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய 8 நகரங்களில், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இடம்பெறும் போலீஸ் ரோந்துப் படைகள் (ஷி டீம்ஸ்)உருவாக்கப்பட உள்ளன.

அத்துடன், ஆபத்து காலத்தில் உதவிக்கு அழைக்கும் பட்டன் வசதி ஏற்படுத்துதல், சாலைகளில் ஸ்மார்ட் எல்இடி விளக்குகள் பொருத்தல், பல்வேறு காரணங் களுக்காக ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு செல்லும் பெண்கள், குழந்தைகள் தங்குவதற்குப் பாது காப்பான விடுதிகள் அமைத்தல், கழிவறைகள் கட்டுதல், தீர்வு மையங்கள், கட்டுப்பாட்டு மையங் கள், சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு மற்றும் தடயவியல் துறையும் இடம்பெறுகின்றன.

மேலும், ஆபத்தான சூழ்நிலை யில் பெண்கள் அழைத்தால் செல்வதற்கு, ‘அபயம்’ என்ற பெயரில் பெண்கள் போலீஸ் ரோந்து படையினருக்கு வேன்கள் வழங்கப்படும். மேலும், போலீஸ் நிலையங்களில் பெண்கள் உதவி பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பெண்கள் தயக்கம் இல்லா மல் புகார் கொடுக்கவும், ஆலோ சனைகள் பெறவும் முடியும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

நகரங்களில் பெண்களின் பாது காப்பை உறுதிப்படுத்துவதற்கான சிறப்பு திட்டம், 2018-19 - 2020 - 21-ம் ஆண்டுக்குள் முழுமையாக செயலுக்கு வந்துவிடும். இத் திட்டத்துக்காக, ‘நிர்பயா நிதியம்’ மூலம் ரூ.2,919.55 கோடி ரூபாயை உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உள்ளது.

(டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டுபேருந்தில் அழைத்து செல்லப்பட்ட இளம்பெண் பலாத் காரத்துக்கு உள்ளாகி பின்னர் மரணம் அடைந்தார். நாடு முழு வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இச்சம்பவத்துக்குப் பின்னர், ‘நிர்பயா நிதியம்’ உருவாக்கப் பட்டது. இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.)

பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ்டெல்லிக்கு 663.67 கோடி, மும்பைக்கு ரூ.252 கோடி, சென்னைக்கு ரூ.424.06 கோடி, அகமதாபாத்துக்கு ரூ.253 கோடி, கொல்கத்தாவுக்கு ரூ.181.32 கோடி, பெங்களூருவுக்கு ரூ.667 கோடி, ஹைதராபாத்துக்கு ரூ.282.50 கோடி, லக்னோவுக்கு ரூ.195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான விரிவான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இவ்வாறு உள்துறை மூத்த அதிகாரி கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x