Published : 18 Sep 2018 15:22 pm

Updated : : 18 Sep 2018 17:57 pm

 

பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகார் கூறி பிஷப் பிராங்கோ கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் 13 முறை  பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.

மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஏதுவாக பிஷப் பதவி விலகியுள்ளார். தனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.  பிராங்கோ நாளை போலீஸார் முன்னிலையில் ஆஜராக உள்ள நிலையில் போலீஸார் கைது செய்யக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால், முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறுகைகயில் ‘‘கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி திட்டமிட்டே என் மீது புகார் கூறப்படுகிறது. கன்னியாஸ்திரி கூறிய தகவல் அனைத்தும் புனையப்பட்ட கதை மட்டுமே. தவறான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு என்னை சிக்க வைக்க சதி நடப்பதால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘நேரில் ஆஜராக கோரி பிஷப் பிராங்கோவுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பி விட்டோம். அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம். கைது செய்வது குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும்’’ என தெரிவித்துள்ளனர்.

 

பிஷப் பிராங்கோகன்னியாஸ்திரிபாலியல் புகார்கேரள உயர் நீதிமன்றம்Kerala nun rape caseBishop Franco MulakkalHC Anticipatory bail

Popular Articles

You May Like

More From This Category

More From this Author