Published : 20 Sep 2018 08:52 AM
Last Updated : 20 Sep 2018 08:52 AM

உ.பி. அரசு சிக்கன நடவடிக்கை

அரசு அதிகாரிகள் நட்சத்திர ஓட்டல்களில் விருந்து நடத்தக் கூடாது, விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் செலவுகளைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கையாக அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய 18 அம்சங்களை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகாரிகள் நட்சத்திர ஓட்டல்களில் விருந்து நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வெளிநாட்டு பயணங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் விமானப் பயணங்களின்போது சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஒரு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டால் அவரது அலுவலகத்தில் மேஜை, நாற்காலிகள், சோபாக்கள் ஆகியவற்றை புதிதாக மாற்ற வேண்டியது இல்லை என்றும் பழையவற்றையே உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை உத்தரபிரதேச அரசு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x