Published : 26 Sep 2014 05:06 PM
Last Updated : 26 Sep 2014 05:06 PM

பாஜகவை காக்கையுடன் ஒப்பிட்டு சிவசேனா கடும் விமர்சனம்

பாஜகவை காக்கையுடனும், அமாவாசையுடனும் ஒப்பிட்டு சிவசேனா கடுமையாக விமர்சித்திருப்பது, மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக உடனான 25 ஆண்டு கால கூட்டணி உறவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மகாராஷ்ட்ராவில் அக்கட்சி இனி தங்கள் எதிரியாகவே திகழும் என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், பாஜகவை கடுமையாக விமர்சித்து தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், "இந்தச் சூழலில் நாம் கூறக்கூடியது ஒன்றுதான். மகாராஷ்டிராவில் இருந்த அமாவாசை முடிவடைந்து, சுப நவராத்திரி துவங்கியுள்ளது. சோற்றுப் பிண்டத்தை தின்ற காக்கைகள் அனைத்தும் பறந்துவிட்டன.

சத்ரபதி சிவாஜி போன்ற வீரர்கள் வாழ்ந்த பூமியில் இருக்கும் மக்கள் விரைவில் நல்ல விஷயங்களை மட்டும் காண்பர். எதிர்காலத்தில் மகாராஷ்டிராவில் நடக்க உள்ளவை அனைத்தும் நல்லதாகவே இருக்கும்.

தற்காலிகமாக நிகழும் அரசியல் குழப்பங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை பாதித்துவிடக் கூடாது. அப்படி ஏதேனும் நேர்ந்தால் நேர்மையும் உண்மையும் அதன் பொருளை இழந்துவிடும்.

மகாராஷ்டிர மக்களின் உணர்வுகளை அவமதித்தவர்கள், இந்த மாநிலத்தின் எதிரியாகவே பார்க்கப்படுவர். இந்த அவமதிப்பு நமது மாநிலத்துக்காக உயிர் துறந்த தியாகிகளையே புறக்கணிப்பதாகும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x