Last Updated : 20 Sep, 2018 08:43 AM

 

Published : 20 Sep 2018 08:43 AM
Last Updated : 20 Sep 2018 08:43 AM

மனித உரிமை ஆணையத் தலைவரின் பதவிக் காலத்தை குறைக்க முயற்சி

மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் அதன் 4 உறுப் பினர்களின் பதவிக் காலத்தை மூன்று வருடங்களாக குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

தேசிய மனித உரிமை ஆணை யம் 1995-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. அந்த ஆணையத்துக்கு ஒரு தலைவர் மற்றும் 4 உறுப் பினர்கள் என பதவியிடங்கள் உரு வாக்கப்பட்டன. இவர்களின் பதவிக் காலம் 5 ஆண்டாக நிர்ணயிக்கப் பட்டது.

இவர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள் ளது. இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கூறியதாவது:

மனித உரிமை ஆணையத்துக்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அதன் செயல்பாடுகளை புரிந்து கொள்வதற்கே சில காலம் தேவைப் படும். அதன் காரணமாகவே, பதவிக்காலத்தை 3-ஆக குறைக்க முயற்சிகள் நடைபெறுவதாக கருத வேண்டியுள்ளது. இதற்கான சட்டதிருத்த மசோதா, மாநிலங் களவையில் தாக்கல் செய்யப் படும்போது தகுந்த விவாதம் நடத் தப்பட வேண்டும். அப்போதுதான், இதற்கான காரணம், பின்னணி என்ன என்பது தெரியவரும் என அவர் தெரிவித்தார்.

தேசிய மனித உரிமை ஆணை யம் தொடங்கப்பட்ட காலங் களில், ஆண்டொன்றுக்கு சுமார் 7 ஆயிரம் புகார்கள் விசாரிக்கப் பட்டன. ஆனால், தற்போது ஆணை யத்தால் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு லட்சத்தை தாண்டுகிறது. இதில், தடுப்புக்காவல் உயிரிழப்பு வழக்குகள் மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு வரை 1,200 மடங்காக உயர்ந்துள்ளன.

இந்த நிலையில், ஆணையத் தின் பதவிக்காலத்தில் மாற்றம் ஏற்படுத்தினால், அதன் செயல்பாடு கள் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. தேசிய மனித உரிமை ஆணயத்தின் தலைவராக நீதிபதி ஜே.எல்.தத்து பதவி வகிக்கிறார். இதன் உறுப்பினர் களாக நீதிபதி பிங்கி சந்திரா கோஷ், நீதிபதி டி.முருகேசன் மற்றும் ஜோதிகா கல்ரா ஆகியோர் உள்ளனர். மற்றொரு உறுப்பினர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்த ஒரு உறுப்பினர், அதன் பதவிக்காலம் மாற்றம் செய்த பின்பே அமர்த்தபடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x