

மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது என பாஜக எம்.பி. சாக் ஷி மகராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது அரசியல் கட்சிகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னவுஜ் மாவட்டம் நடேமாவ் பகுதியில், உன்னாவ் தொகுதி எம்.பி. சாக் ஷி மகராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது. மதரஸாக்கள், பயங்கரவாதிகளை யும் ஜிகாதிகளையும் உருவாக்கு கின்றன. இது தேச நலனுக்கு நல்லதல்ல. மதப்பள்ளிகளில் தேசிய வாதம் கற்றுத்தரப்படுவ தில்லை. எந்த ஒரு மதரஸாவிலாவது ஆகஸ்ட் 15-ம் தேதியன்றோ, ஜனவரி 26-ம் தேதியன்றோ தேசியக் கொடி ஏற்றப்படுவதைக் காட்ட முடியுமா?
நமது பெரும்பான்மையான பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைப்ப தில்லை. ஆனால், தேசியவாதத் துடன் சிறிதளவும் தொடர்பில்லாத மதரஸாக்களுக்கு அரசு உதவி வழங்கப்படுகிறது, என தெரிவித் தார்.
சாக் ஷிமகராஜின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “ இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கி, நாட்டை மற்றொரு பாகிஸ்தானாக மாற்றும் முயற்சி” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறும்போது, “சமூகத்தில் வேறுபாடுகளை உருவாக்கும் நோக்கத்தில் சாக் ஷி பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சான்று கூறும் விதத்தில் இப்பேச்சு அமைந் துள்ளது.
பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகளால் இப்புரளி கிளப்பிவிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 7-ம் தேதி பேசிய சாக் ஷி மகராஜ், “மதரஸாக் கள் தீவிரவாதத்தின் கூடாரம். ‘லவ் ஜிஹாத்’ மதரஸாக் களில்தான் ஊக்குவிக்கப் படுகிறது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.