Published : 24 Sep 2018 08:13 am

Updated : : 24 Sep 2018 08:13 am

 

என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நக்சல்களிடம் வெளிநாட்டில் தயாரித்த 7 ‘டெலஸ்கோபிக் சைட்ஸ்’ சாதனம்: சத்தீஸ்கர் மாநில போலீஸார் அதிர்ச்சி

7

சத்தீஸ்கரில் நக்சல்கள் மீது என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து வெளிநாட்டில் தயாரிக் கப்பட்ட 7 ‘டெலஸ்கோபிக் சைட்ஸ்’ அதிநவீன உபகரணத்தை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சில மாவட்டங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சல் ஒழிப்பு சிறப்புப் படை, போலீஸார் இணைந்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நக்சல் தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது இருதரப் புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. நக்சல்கள் தப்பியோடிவிட்டனர்.

அதன்பிறகு அந்த இடத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி யதில், வெளிநாட்டில் தயாரிக்கப் பட்ட 7 அதிநவீன ‘தொலைநோக்கி பார்வை’ (டெலஸ்கோபிக் சைட்ஸ்) உபகரணத்தை கண்டெடுத்தனர். அவற்றைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த உபகரணம் துப்பாக்கிகளில் பொருத்தி, தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக பார்த்து சுடமுடியும். 150 முதல் 200 மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கை துல்லியமாகப் பார்த்து துப்பாக்கியால் சுட முடியும்.

இதுபோன்ற அதிநவீன தொலை நோக்கி பார்வை சாதனம், மாநில பாதுகாப்புப் படையினரிடம் கூட இல்லை. இந்த டெலஸ்கோபிக் சைட்ஸ் உபகரணத்தை துப்பாக் கியில் பொருத்திவிட்டு, மரங்கள் அல்லது சிறிய மலை மீதிருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரை சுட்டு வீழ்த்த முடியும். இதுபோன்ற அதி நவீன உபகரணங்கள் நக்சல்களிடம் இருந்து கண்டெடுத்துள்ளது இதுவே முதல் முறை என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பா ளர் ஜிதேந்திரா சுக்லா கூறியுள்ளார்.

போலீஸார் கைப்பற்றியுள்ள டெலஸ்கோபிக் சைட்ஸ் என்பது ‘ஆப்டிகல் பார்வை’ சாதனமாகும். அதில், ‘மேட் இன் ஸ்பெயின்’ என்றும் ‘புஷ்நெல்’ என்ற கம்பெனி பெயரும் இடம்பெற்றுள்ளது. நக்சல்களிடம் இதுபோன்ற அதிநவீன வெளிநாட்டு உபகரணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள் ளது. இந்நிலையில், நக்சல்களிடம் அதிநவீன ஆயுதங்கள் புழங்குவது பாதுகாப்புப் படையினரை அதிர்ச் சியடைய செய்துள்ளது.


Popular Articles

You May Like

More From This Category

More From this Author