பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; மும்பையில் பெட்ரோல் விலை ரூ.87.89 ஆக அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; மும்பையில் பெட்ரோல் விலை ரூ.87.89 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்து வருவதால் இறக்குமதிக்கான செலவினம் அதிகமாக பெட்ரோல், டீசல் விலைகள் தினமும் அதிகரித்து வருகின்றன.

மும்பையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87,89 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.77.09-ஆகவும் உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் இன்றும் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.

டெல்லியில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.50 ஆகவும் டீசல் விலை ரூ.72.61 என்றும் அதிகரிப்பு கண்டுள்ளது, ஆனால் 4 பெருநகரங்களில் டெல்லியில் விலை குறைவுதான்.

டெல்லியில் பெட்ரோல் விலையில் உற்பத்தி வரி ரூ.19.48, டீலர் கமிஷன் ரூ.3.63, வாட் வரி ரூ.16.83. அதே போல் டீசல் உற்பத்தி வரி ரூ.15.33. வாட் வரி ரூ.10.46.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.83.39 என்றும் டீசல் விலை ரூ.75.46 என்றும் விற்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.83.66, டீசல் விலை ரூ.76.75 என்றும் விற்கப்படுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய தாழ்வாக ரூ.72.12 என்று சரிந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 77 டாலர்களுக்கும் மேல் விற்கப்படுகிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% எண்ணெய் இறக்குமதி மூலம்தான் செய்யப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்துள்ளன, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ எட்டிவிடும் அபாயமுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாரத் பந்த் நடைபெறுகிறது, இதற்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in