Published : 23 Sep 2018 08:41 AM
Last Updated : 23 Sep 2018 08:41 AM

30% செல்போன் ஆந்திராவில்தான் தயாராகிறது: சந்திரபாபு நாயுடு பெருமிதம்

இந்தியாவில் மக்கள் பயன்படுத் தும் செல்போன்களில் 30 சதவீதம் தற்போது ஆந்திராவில்தான் தயாரிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திருப்பதியில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

மருத்துவம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நகரமாக திருப்பதி உருவாக்கப்படும். திருப்பதியை நவீன நகரமாக உருவாக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், பல தேசிய நெடுஞ்சாலைகள் திருப்பதி நகரை இணைக்கும்படி அமைக்கப்பட உள்ளன.

தற்போது ஆந்திர மாநிலத்தில் பல செல்போன் நிறுவனத் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. நமது நாட்டில் உள்ள 30 சதவீத செல்போன்கள் இங்குதான் தயாரிக்கப்படு கின்றன். இது, நாம் பெருமைப் படக்கூடிய விஷயமாகும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

முன்னதாக, கபிலதீர்த்தம் அருகே ‘நகர வனம்’ எனும் திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத் தின் மூலம் திருப்பதியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x