ஜம்மு - காஷ்மீரில் கனமழை: ஜீலம் நதி வெள்ளப் பெருக்கில் சிக்கி 14 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் கனமழை:  ஜீலம் நதி வெள்ளப் பெருக்கில் சிக்கி 14 பேர் பலி
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில் கன மழை காரணமாக ஜீலம் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக வெள்ள மீட்ப்புப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பூஞ்ச், பத்காம் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி பலியான 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குல்காம், அனந்த்நாக், புல்வாமா, பாராமுல்லா ஷோபியன், ஸ்ரீநகர், பூஞ்ச், ஜம்மு, கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீநகரில் ஜீலம் நதியில் அபாய கட்டத்திற்கு மேல் 4 அடி அதிகரித்து தீண்ணீர் பாய்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in