Published : 20 Sep 2018 08:01 AM
Last Updated : 20 Sep 2018 08:01 AM

இஸ்ரோ உளவு வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக காத்திருந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறியாமலே உயிரிழந்த விஞ்ஞானி சந்திரசேகர்

இஸ்ரோ உளவு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு விடுவிக் கப்பட்டவர்களில் ஒருவர் முன் னாள் விஞ்ஞானி கே.சந்திர சேகர் (76). பொய் வழக்கு தொடர்பாக நியாயம் கேட்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்ந்த வழக் கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேட்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவலுடன் காத் திருந்த சந்திரசேகர், தீர்ப்பு வெளியாவதற்கு சற்று முன்பு கோமா நிலைக்கு சென்றார். அடுத்த 2 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.

ரஷ்ய விண்வெளி அமைப் பின் துணை நிறுவனமான க்ளாவ்கோஸ்மோஸில் 1992-ல் இந்திய பிரதிநிதியாக பணியில் சேர்ந்தார் கே.சந்திரசேகர். அந்த காலகட்டத்தில் எஸ்.நம்பி நாராயணன் இந்திய விண் வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானி யாக பணியாற்றினார்.

இந்நிலையில், 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ரஷ்யா, பாகிஸ் தானுக்கு விற்றதாகவும், உளவு பார்த்ததாகவும் புகார் எழுந் தது. இது தொடர்பாக நம்பி நாரா யணன், சந்திரசேகர், மாலத்தீவு பெண்கள் 2 பேர் உட்பட 6 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை முதலில் கேரள போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றசாட்டு பொய்

இவர்கள் மீதான குற்றச் சாட்டு பொய்யானது என சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. அதனால், அனைவரையும் விடு தலை செய்து உச்ச நீதி மன்றம் 1998-ல் உத்தரவிட்ட துடன் இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கு மாறும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

வெறும் சந்தேகத்தின் பேரி லான வழக்கு என்று கூறி, வழக் கிலிருந்து நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டாலும் முக்கிய பொறுப்புகள் ஏதும் தரப்படா மலேயே 2001-ல் அவர் பதவி யிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து, தனக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்தி துன்புறுத்திய கேரள காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 14-ம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டதால் பாதிக்கப் பட்டவர் என்ற வகையில், நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சந்திர சேகரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், தீர்ப்பை அறியா மலேயே சந்திரசேகர் உயிரிழந் துள்ளார்.

இதுகுறித்து சந்திரசேகர் மனைவி கே.ஜே.விஜயம்மா கண்ணீர் மல்க கூறும்போது, “உடல்நலக் குறைவால் பாதிக் கப்பட்ட எனது கணவர் பெங் களூருவில் உள்ள கொலம் பியா ஆசியா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். விஞ்ஞானி நம்பி நாரா யணனுக்கு எதிரான வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

தீர்ப்பு வெளியாக இருந்த கடந்த 14-ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு காபி கேட்டார். கொடுத்தேன். அப்போது இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்றார். ஆனால், காலை 7.15 மணிக்கு கோமா நிலைக்கு சென்றார். இதனால் தீர்ப்பு பற்றிய செய்தியை அவரால் கேட்க முடியவில்லை. அதன் பிறகு அவருக்கு நினைவு திரும்ப வில்லை. 16-ம் தேதி இரவு 8.40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருந்த எங்களது குடும்ப வாழ்க்கை, இந்த பொய் வழக்கால் தடம்புரண்டது. எதற் காக பொய் வழக்கு போட்டார் கள் என இன்று வரை தெரிய வில்லை. மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளா னோம். பொதுத் துறை நிறு வனமான எச்எம்டியில் பொது மேலாளராக நான் பணி புரிந்ததால் குடும்பத்தை ஓர ளவுக்கு சுமுகமாக நடத்த முடிந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x