Last Updated : 18 Sep, 2014 09:48 AM

 

Published : 18 Sep 2014 09:48 AM
Last Updated : 18 Sep 2014 09:48 AM

கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனா உட்பட இந்து அமைப்புகளுக்கு தடை?: போராட்டம் வெடிக்கும் என முத்தாலிக் எச்சரிக்கை

பொதுமக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி பொது அமைதியை கெடுத்து வருவதாகக் கூறி, ஸ்ரீராம் சேனா அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தடைவிதிப்பது குறித்து பரிசீலிக் கப்படும் என கூறியிருப்பதால் அந்த அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபடப் போவதாக அறிவித் துள்ளன.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் மகாராஷ்டிர எல்லையில் கடந்த இரு மாதங்களாக கன்னடர்களுக்கும், மராட்டியர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இதேபோல சிக்கோடி, பீதர் ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி கலவரம் ஏற்படுகிறது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தலைமையில் புதன்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இதில் பெல்காம், பீதர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது: வட கர்நாட கத்தில் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது கவலை அளிக்கிறது. ஸ்ரீராம் சேனா, சிவ‌சேனா, பஜ்ரங் தள் உள்ளிட்ட சில அமைப்புகளே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

பிரமோத் முத்தாலிக் தலைமையில் இயங்கும் ஸ்ரீராம் சேனா அமைப்புக்கு கோவா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகத்திலும் இந்த அமைப்புக்கு தடை விதிக் கப்படும்.

எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைந்தபோது, மங்களூர் உள்ளிட்ட இடங்களில் பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவா அமைப்புகள் ப‌ட்டாசு வெடித்து கொண்டாடின. பெல்காமை மகாராஷ்டிராவோடு இணைக்க வேண்டும் என சிவசேனா கூறி வருகிறது.

சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் இதுபோன்ற அமைப்புக்கும் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்தார்.

மாநில பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி இதுபற்றி பேசும்போது, “கர்நாடக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிக்கிறேன். பொது சேவையில் ஈடுபட்டுவரும் இந்து அமைப்புகளை தடை செய்தால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.

பிரமோத் முத்தாலிக் ‘தி இந்து'விடம் கூறியதாவது:

எங்களுடைய அமைப்புக்கு கோவா அரசு தடைவிதிக்க வில்லை. ஸ்ரீராம் சேனா தலைவர்கள் யாரும் நுழையக் கூடாது என்று மட்டுமே கூறியிருக் கிறது. இதைக் காரணம் காட்டி கர்நாடக‌த்தில் தடைவிதிப்பதை ஏற்கமுடியாது.

இந்த முடிவை சித்தராமையா உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x