Published : 28 Sep 2014 12:29 PM
Last Updated : 28 Sep 2014 12:29 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்த முள்ள 288 தொகுதிகளில் 261-ல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீதமுள்ள 27 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள் ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடை பெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவ டைந்தது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் 118 தொகுதிளுக்கு வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டனர். இப் பட்டியலில் மாநில முதல்வர் பிரதிவி ராஜ் சவாண், அவரது அமைச் சரவை சகாக்கள் பலர் இடம்பெற்றி ருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி யுடனான 15 ஆண்டு கால கூட்ட ணியை, சரத்பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ் முறித்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில் கட்சியின் மூத்த தலைவர் சிவாஜி ராவ் மோகே மற்றும் முன்னணி தலைவர்கள் பலர் இடம்பெற்றுள் ளனர். இதன் மூலம் மகாராஷ் டிரத்தில் 261 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி யிடுகிறது.
இம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் சில சிறிய கட்சிக ளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத் துள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு நேற்று முன்தினம் 8 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கியது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 174 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 114 தொகுதி களிலும் போட்டியிட்டன.