Published : 15 Sep 2018 12:02 PM
Last Updated : 15 Sep 2018 12:02 PM

பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சி தலைவர்கள் பக்கோடா தான் விற்க வேண்டும்: அகிலேஷ் நகைச்சுவை பேச்சு

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சி தலைவர்கள் பக்கோடா விற்கும் நிலைமை ஏற்படும் என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் பேசினார்.

உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் நேற்று பிரமாண்ட சைக்கிள் பேரணி நடத்தினர். இதல் கலந்து கொண்டு அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

‘‘2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சோதனை. பாஜவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும். எதிர்கட்சிகள் தனித்து போட்டியிட்டால் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். அவ்வாறு நடந்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதை மனதில் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் செயல்பட வேண்டும். பிரதமர் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்களின் ஒரே குறிக்கோள். இந்த இலக்குடன் சமாஜ்வாதி கட்சி, மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு உத்தரப் பிரதேச மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x