

நடைமுறைக்கு ஒத்துவராத, காலாவதியான சட்டங்களை நீக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருக்கு நேற்று மாலை வந்தார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா, முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
பின்னர், பாஜக சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மோடி பேசிய தாவது: பெங்களூரின் வளர்ச்சிக்கும், கர்நாடகத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.
நாட்டின் ஆட்சி நிர்வாகம் சிறப் பாக செயல்பட வேண்டும் என்றால் முதலில் அசுத்தமானவற்றை அப்புறப் படுத்த வேண்டும். மாற்றுக் கட்சியி னராக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும் மத்திய அரசுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை வழங்க வேண்டும். நாட்டில் உள்ள தேவையற்ற சட்டங்களையும், காலாவதியான சட்டங்களையும் அகற்ற முடிவு செய்திருக்கிறோம். இதை வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலுடன் மேற் கொள்ளவுள்ளோம்'' என்றார்.