Published : 28 Sep 2018 08:19 AM
Last Updated : 28 Sep 2018 08:19 AM

லோக்பால் அமைப்பின் தேடுதல் குழு நியமனம்

லோக்பால் அமைப்பின் தேடுதல் குழுவுக்கு தலைவர், உறுப்பினர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் நிறை வேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி தேசிய அளவில் லோக்பால் அமைப்பும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.

லோக்பால் தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள் ளிட்டோர் இடம்பெற வேண்டும். மக்களவையில் தற்போது காங் கிரஸ் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

இந்நிலையில் கடந்த மார்ச் 1, ஏப்ரல் 10, ஜூலை 19, ஆகஸ்ட் 21, செப்டம்பர் 4, செப்டம்பர் 19-ம் தேதிகளில் நடந்த லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிர்கார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து அளித்தால் மட்டுமே கூட்டங்களில் பங்கேற் பேன் என்று கூறி தேர்வுக் குழு கூட்டங்களை கார்கே புறக் கணித்தார்.

தலைவராக முன்னாள் நீதிபதி

லோக்பால் அமைப்பின் தேடுதல் குழு தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நிய மிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சக்சா ராம் சிங் யாதவ், குஜராத் முன்னாள் டிஜிபி சபரீசன் எஸ் கந்துவாவாலா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லலித் கே பன்வார், ரஞ்சித் குமார் ஆகிய 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் களை பரிந்துரை செய்வார்கள்.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

லோக்பால் தேர்வுக் குழுவின் கூட்டங்களை எதிர்க்கட்சி புறக் கணித்து வருகிறது. காங்கிரஸ் மக்களவை தலைவர் என்ற வகை யில் மல்லிர்கார்ஜுன கார்கேவுக்கு பலமுறை அழைப்பு அனுப்பப் பட்டும் அவர் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

லோக்பால் சட்ட விதிகளின்படி அந்த அமைப்பின் தேடுதல் குழு தலைவர், உறுப்பினர்களை நிய மித்துள்ளோம். இதன்மூலம் லோக் பால் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லை எட்டி யுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியபோது, "லோக்பால் சட்ட விதிகளின்படியே மத்திய அரசு செயல்படுகிறது" என்று தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x