Published : 16 Sep 2018 02:48 PM
Last Updated : 16 Sep 2018 02:48 PM

புத்த மடாலயத்திலும் பாலியல் பலாத்காரம்: தலாய் லாமா

புத்தமத பெண் ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் உண்மை தான் என திபெத்திய புத்தமத துறவி தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் பலமுறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.

மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதில் 19–ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஏதுவாக பிஷப் பதவி விலகியுள்ளார். தனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விவகாரம் இந்தியாவில் மட்டுமின்றி வாடிகன் வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்தில் புத்தமத மாநாடு நடைபெற்று வருகிறது. திபெத் புத்தமத துறவியான தலாய் லாமா இதில் பங்கேற்றுள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்கார சம்பவத்தை போலவே புத்தமத பெண் ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு அவர் பதிலளித்ததாவது:

‘‘தர்மசலாவில் நடந்த மேற்கத்திய புத்தமத ஆசிரியர்கள் மாநாட்டில் பாலியல் பலாத்கார புகார்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தன. அது உண்மை தான். பாலியல் குற்றம் செய்பவர்கள் புத்தரின் போதனையை பற்றி கவலைப்படவில்லை. இது வெட்கக்கேடானது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x