

பிஹாரின் பழம்பெரும் பன்னாட்டு கல்வி மையமான நாளந்தா பல்கலைக்கழகத்தை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 19-ம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் கோபா சப்ரவால் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறும்போது, “விழாவில் பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியும் பங்கேற்கிறார். அண்டை நாடுக ளின் தூதர்களுக்கும், இந்தப் பல் கலைக்கழகம் மீண்டும் உருவான தில் பங்காற்றிய 18 நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
சீனா, ஆஸ்திரேலியா, தாய் லாந்து, லாவோஸ், இந்தோ னேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதாக ஒப்புதல் அளித் துள்ளன” என்றார்.
800 ஆண்டுகளுக்குப் பிறகு நாளந்தா பல்கலைக்கழகத்தில், 15 மாணவர்கள், 6 பேராசிரி யர்களுடன் கடந்த 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கின.
பழங்கால நாளந்தா பல் கலைக்கழகம் 12-ம் நூற்றாண் டில் துருக்கியப் படைகளால் சிதைக்கப்பட்டது. இதன் சிதைவுகள் எஞ்சியிருக்கும் இடத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் ராஜ்கிர் நகரில் தற்போது மீண்டும் இப் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்டுள்ளது. கல்விக்காலம் முழுவதும் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் உருவாக்கப்படும் இதன் கட்டுமானப் பணிகள் 2020-ல் முடிவடையும்.