Published : 13 Sep 2018 03:49 PM
Last Updated : 13 Sep 2018 03:49 PM

மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

லண்டனில் நேற்று கோர்ட் விசாரணைகளுக்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, லண்டன் வருவதற்கு முன்பாக தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.

தான் மல்லையாவை சந்திக்கவில்லை, அது ஒரு முறையான சந்திப்பில்லை, மல்லையா தன் பின்னால் வேகமாக வந்து ஏதோ கூறினார் நான் பொருட்படுத்தவில்லை என்று அருண் ஜேட்லி தொடர் ட்வீட்களில் மறுக்க, தற்போது மல்லையாவை செண்ட்ரல் ஹாலில் அருண் ஜேட்லி சந்தித்தாகவும் இருவரும் 15-20 நிமிடங்கள் பேசியதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதனையடுத்து மல்லையா தப்பிச் செல்ல அருண் ஜேட்லி உதவினார் என்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ட்வீட் செய்யும் போது, “மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த வலுவன லுக் அவுட் நோட்டீஸ் எப்படி நீர்த்துப் போகச் செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்? அக்டோபர் 24, 2015-ல் தப்பிச் செல்வதை தடுக்கும் நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக மாறியது எப்படி.

மல்லையா டெல்லியில் வந்து யாரையோ பார்த்துள்ளார், அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும். அவர்டஹன் லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகச் செய்துள்ளார், யார் இதைச் செய்தது” என்று ட்வீட் செய்தார்.

இன்று “இப்போது நம்மிடம் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன. 1. லுக் அவுட் நோட்டீஸ் அக்டோபர் 24, 2015-ல் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. அதாவது தடை உத்தரவு, தெரிவிப்பு உத்தரவாக எப்படி மாறியது. இதுதான் மல்லையா செக் செய்யப்பட்ட தன் 54 லக்கேஜ்களுடன் தப்பிச் செல்ல காரணமானது. 2. நாடாளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில் நிதியமைச்சரிடம் தான் லண்டன் செல்வதாக மல்லையா தெரிவித்தது” என்று 2 மறுக்க முடியா உண்மைகள் உள்ளதாக சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x