Last Updated : 21 Sep, 2018 09:03 AM

 

Published : 21 Sep 2018 09:03 AM
Last Updated : 21 Sep 2018 09:03 AM

மனித உரிமை ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து நீதிபதி டி.முருகேசன் ஓய்வு

தேசிய மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீதிபதி டி.முருகேசன் நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

தமிழகத்தின் தேனி மாவட்டத் தில் உள்ள கம்பம் புதுப்பட்டியில் 1951-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி பிறந்தவர் நீதிபதி டி.முருகேசன். சென்னை சட்டக் கல்லூரியில் 1975-ம் ஆண்டு பட்டம் பெற்ற முரு கேசன், சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மூத்த வழக்கறிஞர்களான கே.கே.வேணுகோபால் மற்றும் ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரிடம் உதவி வழக்கறிஞ ராக பணியாற்றினார். அதன் பின்னர், அரசு வழக்கறிஞரான அவருக்கு, கடந்த 2000-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.

சுமார் 12 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யாக இருந்த அவர், சுமார் 1.30 லட்சம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தார். இதில், சென்னை கல்லூரி மாணவர்களின் ‘பஸ் டே’ கொண்டாட்டங்கள், இருசக்கர வாகனப் பந்தயங்களுக்கு தடை விதித்து அளித்த தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

அதேபோல், வணிக நோக்கில் குளங்களில் தாமரை வளர்ப்பதற்கும் தடைவிதித்து அளித்த தீர்ப்பும் முக்கியத்துவம் பெற்றதாகும். தமிழக அரசின் பல்வேறு முக்கிய நிர்வாகப் பதவிகளும் வகித்த அவர், டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த செப்டம்பர் 2, 2012 முதல் ஜூன் 9, 2013 வரை பதவி வகித்தார். அவரது ஓய்வுக்கு பிறகு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக கடந்த செப்டம்பர் 21, 2013-ல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அந்தப் பதவியிலிருந்து அவர் நேற்று ஓய்வுபெற்றார்.

நீதிபதி முருகேசன் ஓய்வுடன் சேர்த்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் மொத்தம் இரண்டு உறுப்பினர் பதவியிடங்கள் காலி யாகி உள்ளன. இந்த ஆணையத் தின் தலைவர் மற்றும் உறுப்பினர் களின் பதவிக்காலம் 5-இல் இருந்து 3-ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான சட்டதிருத்த மசோதா நிறைவேற் றிய பின்னரே, இந்த உறுப்பினர் பதவிகளும் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x