Published : 05 Sep 2018 04:38 PM
Last Updated : 05 Sep 2018 04:38 PM

பீமா-கொரேகான் வன்முறை: ஆதாரங்களை வெளியிட்டதற்காக மகாராஷ்டிரா ஏடிஜி மீது பொதுநல வழக்கு

புனே நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பாக பீமா-கொரேகான் வன்முறைகளின் முக்கிய ஆதாரங்களை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்திய குற்றச்சாட்டை சஞ்சய் பாலேராவ் என்ற சமூக ஆர்வலர் எழுப்பி மகாராஷ்டிரா போலீஸ் கூடுதல் தலைமை இயக்குநர் பரம்வீர் சிங்குக்கு எதிராக பொதுநல மனு தொடுத்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மேஜிஸ்ட்ரேட் உத்தரவுக்குக் கீழ்படியாமல் முக்கிய ஆதாரங்களை ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியது கோர்ட் அவமதிப்பாகும் என்பதே சஞ்சய் பாலேராவ் என்பாரது கண்டனம்.

ஆதாரமான கடிதங்களின் முக்கியப் பகுதிகளை ஏடிஜி செய்தியாளர்களிடம் படித்துக் காட்டியுள்ளது தவறு என்கிறது இந்த பொதுநல மனு.

இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதேநாளில்தான் பீமா கோரேகான் வன்முறையில் பாதிக்கப்பட்ட சதீஷ் கெய்க்வாட் மனுவும் விசாரணைக்கு வருகிறது, சதீஷ் கெய்க்வாட் இந்த வழக்கு விசாரணையை தேசிய விசாரணை ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர், இவர்களுக்கு எதிராக தங்களிடம் இருப்பதாகக் கூறிய ஆதாரங்களை செய்தியாளர்களிடம் காட்டினார் ஏடிஜி. இதனையடுத்து மகாராஷ்டிரா போலீஸ் மீது மும்பை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.

வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஆதாரங்களின் விவரங்களை எப்படி வெளியிட முடியும் என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.

ஆகஸ்ட் 28-ம் தேதி மகாராஷ்டிரா போலீஸ் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி 5 சமூக ஆர்வலர்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கைது செய்தது.

புனேயில் பீமா கொரேகான் வரலாற்று விவகாரம் தொடர்பாக மராத்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு இவர்கள்தான் காரணம் என்பது குற்றச்சாட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x