Last Updated : 19 Sep, 2018 06:16 PM

 

Published : 19 Sep 2018 06:16 PM
Last Updated : 19 Sep 2018 06:16 PM

அரசு பஸ்ஸூக்கு தீ வைத்து கொளுத்திய பெண்: பிரதமர் மோடியை காண முடியாததால் ஆத்திரம்

பிரதமர் மோடியைக் காண முடியாத ஆத்திரத்தில், அரசுப் பேருத்துக்கு தீ வைத்து எரித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

பிரதமர் தனது 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு வந்துள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தும், உதவிகளை வழங்கினார். வாரணாசியில் வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

வாரணாசிக்கு வந்த பிரதமர் மோடியைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அதில் ஒரு பெண், பிரதமர் மோடியைக் காண முடியாத விரக்தியில் இருந்தார். அப்போது, பேருந்து நிலையத்தில் லக்னோவுக்கு புறப்படுவதற்காக ஒரு பஸ் காத்திருந்தது. அதில் பயணிகள் பலர் அமர்ந்திருந்தனர். ஆனால், திடீரென யாரும் எதிர்பாராத வகையில், அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த பெட்ரோலை திடீரென அரசு பஸ் மீது தீவைத்துவிட்டு தப்பினார்.

அந்த பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அலறியடித்து பயணிகள் சிதறி ஓடினார்கள். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டுத் தீ அணைக்கப்பட்டது.

இதையடுத்து பஸ்ஸுக்கு தீ வைத்தவர்கள் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பெயர் வந்தனா ரகுவன்ஸி என்பது தெரியவந்தது. அந்தப் பெண் குறித்து விவரங்களை அறிந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

இது குறித்து வாரணாசி மாவட்ட போலீஸ் எஸ்.பி. தினேஷ் குமார் சிங் கூறுகையில், “ உத்தரப்பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து வந்தனா ரகுவன்சி உண்ணாவிரதம் இருந்துவந்தார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திக் கடந்த மாத 29-ம் தேதி போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியைச் சந்தித்து தனது கோரிக்கையை தெரிவிக்க முயன்ற ரகுவன்சியால் பிரதமரைச் சந்திக்க இயலவில்லை. இதனால், ஆத்தமிரமைடந்து வாரணாயில் உள்ள கண்டோன்மென்ட் பஸ்நிலையத்தில் நின்றிருந்த பஸ்ஸுக்கு தீ வைத்துள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x