Last Updated : 27 Jun, 2019 05:43 PM

 

Published : 27 Jun 2019 05:43 PM
Last Updated : 27 Jun 2019 05:43 PM

அரசு மருத்துவமனை செவிலியர்கள் டிக்டாக் ஆட்டம்: வீடியோ வைரலானதால் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

டிக்டாக் வீடியோ பதிவுகளுக்காக மருத்துவமனையில் ஆட்டம்ஆடி பாட்டுபாடிய செவியலியர்கள் நோயாளிகளைப் பற்றி கவலைப்படாமல் மருத்துவ சேவையை அலட்சியப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சினை ஊடக வெளிச்சத்திற்கு வந்தநிலையில், இந்த செவிலியர்கள் அனைவரும் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்கவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மால்காங்கிரி மாவட்ட தலைமை மருத்துவர் ஊடகங்களிடம் தெரிவித்த விவரம்:

"டிக் டாக் வீடியோ காட்சிகள் தொடர்பாக நான் ஒரு ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளேன், இதுதொடர்பாக ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் அளித்துவிட்டேன். அவர்களுக்கு (செவிலியர்) விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நோட்டீஸ் கிடைத்த 24 லிருந்து 48 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். பின்னர் அவர்கள் மீது மாநில மருத்துவத்துறை உரிய துறைசார் நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

ஒடிசா சுகாதார அமைச்சர் நபகிஷோர் தாஸ் கூறுகையில், "நான் துறை அதிகாரிகளிடம் நடந்தது குறித்து அறிக்கை கோரியுள்ளேன், இப்பிரச்சினையில் செவிலியர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு விசாரணை அறிக்கை பெற்ற பிறகு அவர்கள் மீது சட்டப்படி நான் தகுந்த நடவடிக்கை எடுப்பேன்''.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வீடியோக்களில், வரும் செவிலியர்கள் அவர்கள் தங்களின் மருத்துவப் பணி சீருடையில் பிரசவ நோயாளிகள் வார்டுப் பகுதியில் பாலிவுட் பாடல்களைப் பாடி ஆடும் காட்சிகள் சமூக வலைதங்களில் வைரலாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x