தெய்வமாக வழிபடும் மலையை வெட்டாதீர்கள் சுரங்கப்பணிகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான பழங்குடிகள் ஆர்ப்பாட்டம்

தெய்வமாக வழிபடும் மலையை வெட்டாதீர்கள் சுரங்கப்பணிகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான பழங்குடிகள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தெய்வமாக வழிபடும் மலையை வெட்டாதீர்கள் என சுரங்கப்பணிகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான பழங்குடிகள் நான்காவது நாளாக இன்றும் சட்டீஸ்கரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் கிரண்டல் நகரத்தையொட்டி தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) மூன்று இடங்களில் சுரங்கம் தோண்டி இரும்புத் தாது வெட்டியெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. சட்டீஸ்கரில் சுரங்கம் வெட்ட பழங்குடிகள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 சுரங்கப்பணிகளுக்காக நடைபெறும் மலைகளை வெட்டக்கூடாது என்று கூறி அப்பகுதி வாழும் பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரண்டுல் நகரில் அமைந்துள்ள என்எம்டிசி வளாகம் எதிரே தாண்டேவாடா, சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 200 கிராமங்களிலிருந்து கிராமத்தில் பழங்குடிகளுக்கான சன்யூக் பஞ்சாயத்து சமிதி ஆணையின்படி நூற்றுக்கணக்கான பழங்குடிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள், வில், அம்புகள் ஏந்தி வந்திருந்தனர். இரும்புத்தாது வைப்பு 13 திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டக்குழுத் தலைவர் மங்கள் குஞ்சாம் இதுகுறித்து பேசுகையில், கடந்த நான்கு நாட்களாக போராடத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இந்த நிமிடம் வரை எந்த அதிகாரிகளும் வந்து எங்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்க வில்லை'' என்றார்.

சுரங்கம் வெட்டுவதற்காக இப்பகுதியில் உள்ள 25 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 10 ஆயிரம் மரங்களை அகற்றி விட்டனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

இயற்கையின் கடவுளாக உள்ள நந்த்ராஜின் மனைவியான பிதோத் தேவிதான் இம்மலை. இம்மலையை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். இதில் சுரங்கம் தோண்டுவது எங்கள் பண்பாட்டையே சிதைப்பதாகும்.

இவ்வாறு பழங்குடிகள் போராட்டக்குழுத் தலைவர் குஞ்சாம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in