Last Updated : 26 Jun, 2019 09:20 AM

 

Published : 26 Jun 2019 09:20 AM
Last Updated : 26 Jun 2019 09:20 AM

2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை: அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் இதில் 48 சதவீதம் பேர் பெண்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சிறு பான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று கூறியதாவது:

ஹஜ் பயண அனுமதிக் கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட் டுள்ளதால் காத்திருப்போர் பட் டியலில் உள்ள அனைவருக்கும் இந்த ஆண்டு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால், முதன் முறையாக உத்தரபிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங் களில் இருந்து விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த ஆண்டு மானியம் இல்லாமல் மொத்தம் 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் செல்ல உள்ள னர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவ்வளவு பேர் பயணம் செய்ய இருப்பது இதுதான் முதல் முறை. இதற்காக நாட்டின் 21 மையங்களிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக 500-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோரில் 48 சதவீதம் பெண்கள் ஆவர். மேலும் தங் கள் குடும்ப ஆண் துணை இல்லா மல் (மெஹ்ரம்) ஹஜ் பயணம் செய்வதற்கு இருந்த தடையை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கியது.

இதையடுத்து, இந்த ஆண்டு 2,340 பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்கின் றனர். கடந்த ஆண்டு இது 1,180 ஆக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x