காங். சமூக ஊடக குழுதலைவர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் விலகல்: கடைசியாக பாஜக தலைவருக்கு வாழ்த்து

காங். சமூக ஊடக குழுதலைவர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் விலகல்: கடைசியாக பாஜக தலைவருக்கு வாழ்த்து
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் சமூகஊடகப் பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து விலகினார்.

 பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்து 2 நாட்களில் இந்த முடிவை திவ்யா ஸ்பந்தனா எடுத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டபின், அவருத்து தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் திவ்யா வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்ததுச் செய்தியில் " 1970-ம் ஆண்டுக்குப்பின் நிதித்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர், வாழ்த்துக்கள். நாட்டின பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இல்லை. அதை மேம்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எங்களால் முடிந்த ஒத்துழைப்பு அளிப்போம் " என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின் திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கில் தொடர்பு கொண்டு போது, அவரின் கணக்கு செயல்பாட்டில் இல்லை, நீக்கப்பட்டுவிட்டது என்று பதில் கிடைத்தது. ட்விட்டரில் இருந்து திவ்யா ஸ்பந்தனா ஏன் விலகினார் என்பதற்கு அவரிடம் இருந்தோ, காங்கிரஸ் கட்சியிடமிருந்தோ எந்தவிதமான அதிகாரபூர்வமான விளக்கமும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக கூறியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளையொட்டி காங்கிரஸ் தலைமையிடம் ஒரு உத்தரவு பிறப்பித்தது.அதில், அடுத்த ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பங்கேற்க தடைவிதித்தது. இந்த தடை உத்தரவுக்கும், திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து விலகியதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா எனவும் தெரியவில்லை.

இது குறித்து காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவினரிடம், திவ்யா ஸ்பந்தனா முடிவு குறித்து நிருபர்கள் கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்தவிட்டனர். ஒருவேளை காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு தலைமை திவ்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டதா என்றும் தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in