Published : 06 Jun 2019 08:59 PM
Last Updated : 06 Jun 2019 08:59 PM

2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்: மம்தாவுடன் கைகோர்க்கும் தேர்தல் வியூக ஜாம்பவான் பிரசாந்த் கிஷோர்

மக்களவைத் தேர்தலில் பாஜக மே.வங்கத்தில் கண்டுள்ள முன்னேற்றத்தையடுத்து அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் மட்டுமல்லாது திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூறியதையடுத்து திரிணமூல் தலைமை மம்தா பானர்ஜி இப்போது முதலே பாஜக-வைத் தடுக்கும் வியூகங்களுக்குத் தயாராகி வருகிறார்.

 

இந்த நிலையில்தான் தேர்தல் வியூக வகுப்பு ஜாம்பவான் பிரசாந்த் கிஷோர்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து பணியாற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

 

மே.வங்க மாநிலத்தில் 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகின்றன, அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டார் மம்தா பானர்ஜி.  வியாழக்கிழமையன்று பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜி சந்திப்பு நிகழ்ந்ததையடுத்து இருவருக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக திரிணமூல் வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.

 

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை பெரிய அளவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்ததில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேற்கு வங்கத்தில் பாஜக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு 18 இடங்களை கைப்பற்றியுள்ளது, இந்த 18 லோக்சபா தொகுதிகளில் சுமார் 120 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளது.

 

பிரசாந்த் கிஷோர் குறித்த ஒரு பார்வை:

 

பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர்.  முதலில் நரேந்திர மோடி 2012-ல்  3வது முறையாக குஜராத் முதல்வராகப் பின்னணியில் இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.

 

மிக முக்கியமாக இவர் பெயர் வெளியில் பரவலாகக் காரணமாக அமைந்தது இவரது கருத்தாக்கத்தில் உருவான பொறுப்பேற்பு ஆட்சி நிர்வாகத்திற்கான குடிமக்கள் அமைப்பு (சிஏஜி) என்பதை உருவாக்கி இது 2014 தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமராக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் புகழை உயர்த்தியதில் இந்த அமைப்புக்கும் கணிசமான பங்கு உண்டு. பிறகு இவர் சிஏஜியை இந்திய அரசியல் செயற்பாட்டு கமிட்டி என்பதாக மாற்றினார்.

 

இந்தக் குழுவும் பிரசாந்த்தும் இணைந்துதான் 2015-ல் நிதிஷ் குமாருக்கு பெரிய அளவில் வியூகங்களை வகுத்துக் கொடுத்தனர். நிதிஷை நம்புங்கள் வளர்ச்சி நிச்சயம் என்பதாக பெரிய ஸ்லோகனை எழுப்பி பரப்பினர். நிதிஷ் குமாரின் தேர்தல் நேர 7 அம்சத் திட்டம் பெரிய அளவில் பெயர் கொடுக்க அதை அமல்படுத்த பிரசாந்த் கிஷோரை தன் ஆலோசகராக நியமித்தார்.

 

2016-ல் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் உடன் தேர்தல் வியூகத்திற்காக இணைந்தார். 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பிரசாந்த் கிஷோரை அழைத்தது. அமரீந்தர் சிங் மீண்டும் முதல்வரானார். ஆனால் 2017 உ.பி.தேர்தலுக்காகவும் காங்கிரஸ் இவரைப் பயன்படுத்தியது ஆனால் பாஜக 300+ தொகுதிகளுடன் வியூகங்களைக் காலி செய்தது.

 

2017-ல் ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்தார் பிரசாந்த் கிஷோர் 2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர தேர்தலில் வரலாறு படைத்து முதல்வரானார்.

 

இந்த வெற்றி வரலாறு நிறைந்த பிரசாந்த் கிஷோர்தான் தற்போது மம்தாவுடன் 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இணைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x