Published : 16 Jun 2019 08:41 AM
Last Updated : 16 Jun 2019 08:41 AM

பாலைவன கிராமத்தை பசுஞ்சோலையாக்கிய இன்ஜினீயர்

மகாராஷ்டிராவில் பாலைவன மாக மாறிக் கொண்டிருந்த தனது சொந்த கிராமத்தை அமெரிக்காவில் வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினீயர் பசுஞ்சோலையாக மாற்றியுள்ளார்.

மகாராஷ்டிராவில் மராத்வாடா, விதர்பா பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 முதல் 2018 வரையிலான 5 ஆண்டு களில் மகாராஷ்டிரா முழுவதும் வறட்சியால் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் முக்கால்வாசி பேர் மராத்வாடா, விதர்பா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

மராத்வாடாவின் லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிகச் சிறிய கிராமம் ஹல்காரா. மொத்தம் 1,400 வீடுகள், 6,000 மக்கள் வசிக்கும் இந்த கிராமமும் வறட்சியின் பிடியில் சிக்கி மெல்ல மெல்ல பாலைவனமாக மாறிக் கொண்டிருந்தது. குடிநீருக்கே பஞ்சம் என்ற நிலையில் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீரின்றி பரிதவித்து நின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மூத்த மகன் தத்தா பாட்டீல். அங்குள்ள அரசு பள்ளியில் பயின்ற அவர் ஆரம்பம் முதலே படிப்பில் படுசுட்டியாக விளங்கினார். கர்நாடகாவின் சூரத்கல்லில் உள்ள என்ஐடியில் என்ஜீனியரிங் படிப்பை நிறைவு செய்த அவர் தற்போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் யாகூ நிறுவனத்தில் மூத்த அதி காரியாகப் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் செல்வச்செழிப் போடு வாழ்ந்தாலும் தனது சொந்த கிராமத்தை அவர் மறக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டில் ஹல்காரா கிராமத்துக்கு வந்த அவர், தனது கிராமம் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதை பார்த்து கவலை அடைந் தார். ரயில்கள் மூலம் குடிநீர் வந்தது. விவசாயிகள் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எங்கும் பசுமை இல்லை. வயல்கள் வறண்டு பாளம் பாளமாக வெடித்து கிடந்தன.

மீண்டும் அமெரிக்காவுக்கு திரும் பிய தத்தா பாட்டீல், நீர் மேலாண்மை யில் தனது கவனத்தை திருப்பினார். கலிபோர்னியா வில் ஆண்டுக்கு 400 மிமீ மழை மட்டுமே பெய்கிறது. ஆனால் அந்த பகுதி பச்சை பசேல் என்று காட்சியளிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தனது சொந்த கிராமமான daஹல்காராவில் ஆண்டுக்கு 800 மிமீ மழை பெய்கிறது. ஆனால் கிராமம் வறட்சியில் வாடுகிறது. கலிபோர்னியாவின் நிலத்தடி நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. ஹல்காராவின் நீர்மட்டம் 800 அடியாக உள்ளது. பிரச்சினைக்கான மூலக்காரணத்தை அவர் ஆய்வு செய்தபோது தனது கிராமத்தில் மழைநீர் சேமிப்பு இல்லை என்பதைக் கண்டறிந்தார்.

சொந்த கிராமத்துக்கு திரும்பிய அவர், ஊர் தலைவர்கள், இளைஞர் களை அழைத்துப் பேசினார். தனது பங்களிப்பாக ரூ.10 லட்சத்தை அளித்தார். யாகூ நிறுவனத்திடம் உதவி கோரியபோது, அந்த நிறு வனம் ரூ.65 லட்சத்தை அள்ளிக் கொடுத்தது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் மேலும் ரூ.5 லட்சத்தை திரட்டிக் கொடுத்தார். அருகில் உள்ள கோயில்கள், திரையரங்குகளுக்கு சென்று நிதி திரட்டினார்.

முதல்கட்டமாக ரூ.80 லட்சத்தில் அருகில் உள்ள நதியில் இருந்து கிராமத்துக்கு வரும் கால்வாய்களை தூர்வாரினார். சுமார் 20 கி.மீ. தொலை வுக்கு கால்வாய்கள் புனரமைக்கப் பட்டன. கிராம மக்கள் தங்கள் உழைப்பை நன்கொடையாக வழங் கினர். இரண்டே ஆண்டுகளில் கிராமம் முழுவதும் 26 தடுப்பு அணை களைக் கட்டினார். இதன் மூலம் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகவில்லை. சுமார் 800 அடியாக இருந்த நிலத் தடி நீர்மட்டம், 100 அடியாக உயர்ந் தது. 1,500 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றது. விவசாயிகளின் வருமானம் மும்மடங் காக அதிகரித்தது.

மகாராஷ்டிரா அரசு, வாழும் கலை அமைப்பு, விவசாயிகளின் மகன் கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் நல்லெண்ணம் கொண்டோரெல்லாம் கைகோக்க, ஹல்காரா கிராமம் சொர்க்கபுரியாக மாறியது. இப்போது அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சினையே இல்லை. ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாக ஹல்காரா தலைநிமிர்ந்து நிற்கிறது. கிராம மக்கள் சார்பில் பேஸ்புக் கணக்கு செயல்படுகிறது. 'தண்ணீர் நம் உயிர்' என்ற அடைமொழியுடன் செயல்படும் அந்த பேஸ்புக் பக்கத்தில் கிராமத்தின் சாதனைகளை பொதுமக்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

ஹல்காரா கிராமம் தண்ணீரில் தன்னிறைவைப் பெற்றவுடன் தனது கவனத்தை சுகாதாரத்தின் மீது தத்தா பாட்டீல் திருப்பினார். அவரது முயற்சியால் சுற்றுவட்டார கிராமங் களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

தனது கனவு குறித்து தத்தா பாட்டீல் கூறியபோது,"என்னால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமாகவில்லை. இதில் எனது கிராம மக்களின் உழைப்பு இருக்கிறது. அமெரிக்கா, இந்திய மக்களின் பங்களிப்பு இருக்கிறது. கோயில்கள், திரையரங்குகளுக்கு சென்று நிதி திரட்டியுள்ளேன். மக்கள் என்னை வெறுங்கையோடு அனுப்பியதே இல்லை. எனது பங்க ளிப்பாக இதுவரை ரூ.22 லட்சத்தை வழங்கியுள்ளேன். கடந்த 2016-ம் ஆண்டின் எனது கிராமத்தின் செயற் கைக்கோள் படங்களுடன் அண்மை யில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டு பார்த்தால் பூரிப் பாக இருக்கிறது. பாலைவனமாக இருந்த எங்கள் கிராமம், பசுஞ் சோலையாக மாறியுள்ளது. தண்ணீர், சுகாதாரத்தைத் தொடர்ந்து அடுத்த தாக எனது கிராம மாணவ, மாணவியரின் கல்வியில் கவனம் செலுத்தப் போகிறேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x