

ஆந்திர மாநிலத்தில் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்திலிருந்து இது அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது முதியோர், நெசவாளர்கள், விதவைகளுக்கு தலா ரூ. 1,000, மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த ஆலோ சனைக் கூட்டத்தில், தகுதியற்ற பயனாளிகளைக் களைவதற்காக, கிராமம்தோறும் ஓய்வூதியர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். பின்தங்கிய பகுதிகள், சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழ்மை மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்டு கணக் கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட் டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுடையவர்களாவர்.