Published : 10 Jun 2019 08:54 AM
Last Updated : 10 Jun 2019 08:54 AM

உலகின் உயரமான சியாச்சின் சிகரத்தில் கடும் பனியில் உணவுப் பொருட்கள் உறைந்தன: சுத்தியலால் முட்டையை உடைக்கும் ராணுவத்தினர் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

சியாச்சின் மலை சிகரத்தில் உணவு சமைப்பதற்காக முட்டை, காய்கறி ஆகியவற்றை நமது ராணுவ வீரர்கள் சுத்தியலால் உடைப்பது போன்ற வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே யான இமாச்சலப் பிரதேச மலைப் பகுதியில் அமைந்துள்ளது சியாச் சின். கடல் மட்டத்திலிருந்து சுமார் 20,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த சியாச்சின் பகுதியே உலகின் மிக உயரமான மற்றும் குளிரான போர்க்களம் ஆகும்.

பாகிஸ்தானுக்கு மிக அருகில் அமைந்திருப்பதாலும், இந்த சிகரத்தை கடந்துவிட்டால் இந்தியாவுக்குள் நுழைந்துவிட லாம் என்பதாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக சியாச்சின் பார்க்கப்படுகிறது. எனவே, இங்கு பாதுகாப்புப் பணிக்காக அதிக அளவிலான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.

இந்தியாவின் ஏனைய பகுதிகளில் பணிபுரிவதைக் காட்டிலும் சியாச்சினில் பணி புரிவது மிகவும் கடினம். ஏனெனில், இங்கு வெப்பநிலை -60 டிகிரிக்கும் குறைவு. ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய இந்தக் குளிரில், அங்கு பணியாற்றும் நமது ராணு வத்தினர் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

அந்த வகையில், சியாச்சினில் உள்ள நமது ராணுவ வீரர்கள், அன்மையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதில், உணவு சமைப்பதற்காக முட்டைகளை எடுக் கும் ராணுவ வீரர்கள், அவற்றை சுத்தியலால் உடைக்கின்றனர். கடுங்குளிரில் முட்டை உறை நிலைக்கு சென்றுவிட்டதால் அவற்றை சுத்தியலை கொண்டு மட்டுமே உடைக்க முடிகிறது.

அதேபோல், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய் கறிகளையும் அவர்கள் சுத்தி யைக் கொண்டே உடைத்து பயன்படுத்துகின்றனர். மேலும், பழச்சாறு வைக்கப்பட்டிருக்கும் பையை திறந்து, செங்கல் போன்று உறைந்திருக்கும் அதனை கத்தி யால் வெட்டி உண்கின்றனர்.

நெகிழ்ச்சியான இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளி யான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோரால் பகிரப்பட் டுள்ளது. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சியாச்சினை பொறுத்தவரை, அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்பட்டு கொண்டே இருப்பர். மிகக் கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு சில காலம் தொடர்ச்சியாக பணிபுரியும் பட்சத்தில், ராணுவ வீரர்களுக்கு பல்வேறு கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, சுவாசக் கோளாறு, நுரையீரல் தொற்று, ப்ராஸ்ட்பைட் எனப்படும் ரத்து உறைவு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமின்றி, அங்கு அடிக் கடி பனிப்புயல் மற்றும் பனிச்சரிவும் ஏற்படுவதால் சியாச்சினில் பணி புரிவது மிக சவாலான விஷய மாகவே பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x