பிரதமர் மோடி, முதல்வர் யோகி தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்: சிவசேனா திட்டவட்டம்

பிரதமர் மோடி, முதல்வர் யோகி தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்: சிவசேனா திட்டவட்டம்
Updated on
1 min read

ஜூன் 16ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி செல்கிறார். இதை முன்னிட்டு சிவசேனாவின் இன்னொரு தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி  மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்தவுடன் அயோத்தி சென்று ராமரை வழிபடுவேன் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார், இதனையடுத்து இவரும் புதிதாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 18 எம்.பி.க்களும் அயோத்தி வருகை தருகின்றனர்.  ‘ராமர் பெயரால் வாக்குகளை நாங்கள் சேகரிக்கவில்லை, இனியும் சேகரிக்கப் போவதில்லை’ என்றார் ராவத்.

இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா  மாநிலம் தேர்தலைச் சந்திக்கிறது, அதற்கு முன்பாக அயோத்தி பிரச்சினையைக் கிளப்புவதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறது சிவசேனா. ஆனால் தேர்தல் கண்ணோட்டத்தில் இந்த அயோத்தி பயணத்தைப் பார்க்க வேண்டாம் என்று சிவசேனா விரும்புகிறது:

ராமர் அரசியலுக்கான விஷயம் அல்ல. ராமர் நம் நம்பிக்கை சம்பந்தமான விஷயம். நாங்கள் ராமர் பெயரால் வாக்குகள் சேகரிக்கவில்லை. எதிர்காலத்திலும் சேகரிக்க மாட்டோம். கடந்த நவம்பரில் உத்தவ் அயோத்தி வந்த போது தேர்தலுக்குப் பின் மீண்டும் வருவதாக தெரிவித்திருந்தார். அவர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் என்று ராவத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “மோடி மற்றும் யோகி தலைமையில் ராமர் கோயில் கட்டப்படும். பாஜக இதனை முடிவு செய்யும். 2919 பெரும்பான்மை ராமர் கோயில் கட்டுவதற்காகத்தான். ராஜ்யசபாவிலும் 2020-ல் பெரும்பான்மை பெற்று விடுவோம்.

கடந்த வெள்ளியன்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமர் கோயில் சென்று வந்தார்.  7 அடி உயர ராமர் சிலையை திறந்து வைத்த பின்  “ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது அனைவரது விருப்பமும் ஆகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in