பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையில் 2 புதிய அமைச்சரவை குழு: உள்கட்டமைப்பு, வேளாண்மை துறைகளை மேம்படுத்த தீவிரம்

பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையில் 2 புதிய அமைச்சரவை குழு: உள்கட்டமைப்பு, வேளாண்மை துறைகளை மேம்படுத்த தீவிரம்
Updated on
2 min read

பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமையில் இரண்டு புதிய அமைச்சரவை குழுக்களை ஏற்படுத்தியுள்ளார்.

நாட்டில் பொருளாதார தேக்க நிலையும் வேலைவாய்ப் பின்மை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

முதலீடு மற்றும் வளர்ச் சிக்கான மத்திய அமைச்சரவை குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரதமரை யும் சேர்த்து இக்குழுவில் 5 உறுப் பினர்கள் இடம்பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் 10 உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர்.

இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் தவிர, வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், பெட்ரோலியம் மற் றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திறன் மற்றும் தொழில்முனை வோர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த நிதியாண்டில் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதன் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதம் மட்டுமே இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது காலாண்டில்

(அக்டோபர் டிசம்பர்) 6.6 சதவீதமாகவும் நான்காவது காலாண்டில் (ஜனவரி மார்ச்) 5.8 சதவீதமாகவும் ஜிடிபி வளர்ச்சி சரிந்தது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது.

உலகில் விரைவான பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை இனிமேலும் கூற முடியாத நிலை இதனால் ஏற்பட்டது. மேலும் முதல் காலாண்டில் சீனா 6.4 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டு களில் முதல்முறையாக இந்தியா, சீனாவுக்கு பின்னால் தள்ளப்பட்டது. அதேவேளையில் தேர்த லுக்கு முன்பாகவே நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறித்து புள்ளிவிவரம் வெளியாகி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 2017-18-ல் நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவிகிதமாக உள்ளதாக அரசின் புள்ளியியல் துறை கூறியது.

இது நாட்டில் வேலைவாய்ப் பின்மை 1972-73-க்கு பிறகு அதாவது கடந்த 45 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு உயர்ந் துள்ளதை உறுதிப்படுத்தியது. என்றாலும் இந்த புள்ளிவிவரம் புதிய முறையில் எடுக்கப்பட்டது என்பதால் முந்தைய புள்ளி விவரத்துடன் ஒப்பிட முடியாது என மத்திய அரசு கூறியது.

இந்நிலையில், பொருளா தார தேக்கநிலை, வேலை வாய்ப்பின்மை ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய அமைச்சரவை குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தியுள்ளார்.

அடிப்படை கட்டமைப்பு, வேளாண்மை போன்ற முக் கிய துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் பொருளா தார நடவடிக்கைகளை ஊக்கு விப்பதற்கான வழிகளை முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச் சரவைக் குழு ஆராயும்.

நாட்டில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற் காக வழிகளை வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழு ஆராயும்.

இதில் எடுக்கப்படும் சில முடிவுகள், ஜூலை 5-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

பாதுகாப்பு துறை குழு அமைப்பு

மத்தியில் புதிய அரசு பதவி யேற்றதும் அமைச்சரவை குழுக் கள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு (சிசிஎஸ்) நேற்று அமைக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரம் குறித்த பிரச்சினைகளை இக்குழு கையாளும்.

இக்குழுவில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in