Last Updated : 16 Jun, 2019 03:01 PM

 

Published : 16 Jun 2019 03:01 PM
Last Updated : 16 Jun 2019 03:01 PM

ஒரு சொட்டு தண்ணீரைக்கூட குடிக்க முடியவில்லை 3 மகள்களோடு தற்கொலை செய்கிறேன்: பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்

குடிப்பதற்கு ஒரு சொட்டு நல்ல குடிநீர் இல்லாத நிலையில் வெறுப்படைந்த விவசாயி, தனது 3 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், ஹசாயன் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங். இவருக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.

இவரின் பகுதியில் இருக்கும் ஆழ்குழாய் நீர் மிகவும் உவர்ப்பாக இருப்பதாகக் கூறி பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சந்தர்பால் சிங்கின் புகாரை புறக்கணித்துவிட்டனர்.

இந்த பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் இதேபோன்று குடிநீர் பிரச்சினால் அவதிப்பட்டனர். இதையடுத்து, சந்தரபால் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குடிப்பதற்கு ஒருசொட்டு குடிநீர் கூட இல்லை. என்னால் ஒரு சொட்டு குடிநீரைக் கூட மகள்களுக்கு வழங்க முடியவில்லை. ஆழ்குழாய்நீரில் உவர்ப்பு சுவை அதிகமாக இருப்பதால், தண்ணீரைக் குடிக்க முடியவில்லை ஆதாலால் குடிநீர் கூட என் மகள்களுக்கு வழங்க முடியாத நிலையில், நானும் என் மகள்களும் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து சந்திரபால் சிங் நிருபர்களிடம் கூறுகையில், " எங்கள் பகுதியில் இருக்கும் குடிநீரையும், ஆழ்குழாய்நீரையும் குடிக்கமுடியவில்லை. எங்கு சென்று என் மகள்கள் குடிநீரைக் குடித்தாலும் அதை குடிக்கமுடியாமல் தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.

எங்கள் பகுதியில் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்களும் நிலத்தடிநீரில் அதிகமான உப்பு இருந்ததால் கருதிவிட்டன. ஒரு பாட்டில் குடிநீரைக் கூட என் குடும்பத்தாருக்கும், மகள்களுக்கும் வாங்கித்தர முடியவில்லை. இதற்கு தீர்வு தாருங்கள் என்று அதிகாரிகளிடம்  பலமுறை முறையிட்டும் அது அவர்களின் காதுகளில் விழவில்லை. ஆதலால், குடும்பத்துடன் என் 3 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிவிட்டேன் " எனத் தெரிவித்தார்.

அந்த பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவர் கூறுகையில் " எங்கள் பகுதியில் உள்ள தண்ணீரைக் குடிக்க முடியவில்லை மிகவும் உவர்ப்பாக இருக்கிறது. இந்த பிரச்சினையுடன்தான் வாழ்ந்து வருகிறோம். கால்நடைகள், மிருகங்கள் கூட இந்த நீரைக் குடிக்க மறுக்கின்றன. ஒரு குடம் குடிதண்ணீருக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தொலைவு நடக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x