Published : 16 Jun 2019 01:03 PM
Last Updated : 16 Jun 2019 01:03 PM

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற வேண்டி வாரணாசியில் சிறப்புப் பூஜை

இன்று மான்செஸ்டரில் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வாரணாசியில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

 

ஊடகங்கள் தரப்பில் மட்டுமல்லாது பலவெளிகளிலும் பன்மடங்கு ஊதிப்பெருக்கப்படும் இந்தப் போட்டியில் வெல்வதே முக்கியம், உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற சிந்தனையே பரவலாக மக்களிடையே இருந்து வருகிறது.

 

ஆனால் விராட் கோலி களத்துக்கு வெளியே உள்ள பரபரப்பு நிலை உள்ளே இல்லை, வீரர்கள் பார்வை வேறு என்று தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றால் என்ன வென்றால் என்ன இந்த ஒரு ஆட்டத்தோடு உலகக்கோப்பை முடிந்து விடப்போகிறதா,இதையும் தாண்டிய பெரிய கோப்பைக்குக் குறிவைத்துள்ளோம் என்று இந்தப் போட்டியைப் பற்றியும் அதன் பதற்றங்கள் பற்றியும் கொஞ்சம் தணிப்பு செய்தார்.

 

இந்நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி உ.பி.மாநிலம் வாரணாசியில் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இந்திய தேசியக் கொடி மற்றும் இந்திய அணி வீரர்களின் புகைப்படங்களை வைத்து கங்கை நதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

 

நாட்டில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது, குடிநீர் இல்லை, பிஹாரில் மூளை அழற்சி நோய்க்கு கேள்வி கேட்பாரின்றி குழந்தைகள் பலியாகி வருகின்றன, நாட்டின் பல பகுதிகளிலும் மழை வறண்டு, கடும் வெயில் கொளுத்தி பலர் உயிரிழந்துள்ளனர்.

 

இதற்கெல்லாம் எந்த எதிர்வினையும் இல்லாத நிலையில் ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டிக்கு பூஜையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x