பாலகோட் தாக்குதல் வியூகம் வகுத்த சமந்த் கோயல் ‘ரா’ புதிய தலைவராக நியமனம்: ‘ஐபி’ தலைவர் அரவிந்த் குமார்

பாலகோட் தாக்குதல் வியூகம் வகுத்த சமந்த் கோயல் ‘ரா’ புதிய தலைவராக நியமனம்: ‘ஐபி’ தலைவர் அரவிந்த் குமார்
Updated on
1 min read

பாலகோட் தாக்குதல் வியூகத்தை வகுத்த சமந்த் கோயல் ‘ரா’ உளவுப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

உளவு அமைப்புகளான ‘ரா’ தலைவராக  அனில் தஸ்மானா, ஐபி தலைவராக ராஜீவ் ஜெயின் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இந்தநிலையில், மத்திய அமைச்சரவை நியமனக் குழு தலைவரான பிரதமர் மோடி இன்று இந்திய உளவு அமைப்புகளுக்கான புதிய தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐபியின் புதிய தலைவராக அரவிந்த் குமார் நியமிக்கப்பபட்டுள்ளார்.

அரவிந்த் குமார், காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர். அசாமில் போலீஸ் அதிகாரியாக பணியை துவங்கிய இவர், பிறகு புலனாய்வு பிரிவில் இணைந்து மத்திய அரசிற்காக பணியாற்றி வந்தவர்.

இதுபோலவே வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பான ‘ரா’வின் புதிய தலைவராக சமந்த் கோயலை பிரதமர் மோடி நியமித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரியில் பாலாகோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய  விமானப்படை வெற்றிகரமான தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் பெரும் வெற்றியாக பார்க்கப்படும் இந்த தாக்குதல் திட்டத்தை வகுத்தவர்களில் சமந்த்கோயல் முக்கியமானவர்.

சமந்த் கோயல் 1990களில் பயங்கரவாத தாக்குதல்கள் பஞ்சாப்பில் உச்சத்தில் இருந்த சமயத்தில், பாகிஸ்தான்  ஊடுவலையும், பயங்கரவாதத்தை திறம்பட கையாண்டவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in