Published : 11 Jun 2019 11:07 AM
Last Updated : 11 Jun 2019 11:07 AM

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்: 110 மணிநேர போராட்டம்; வெற்றி கிடைக்கவில்லை

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்பதற்காக 110 மணிநேரம் நடந்த போராட்டம் இன்று முடிவுக்கு வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சிங்ரூரில் விளையாடிக் கொண்டிருந்த பத்வீர் சிங் என்ற 2 வயது சிறுவன், 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். கைகளால் தோண்டப்பட்ட  ஆழ்துளைக் கிணற்றை சிமெண்ட் பைகள் கொண்டு மூடிவிட்டு தோண்டியவர்கள் சென்று விட்டனர். ஆழ்துளை கிணறு இருப்பது தெரியாமல் அந்த சிறுவன் உள்ளே விழுந்துள்ளான்.

 கடந்த 110 மணிநேரமாக சிறுவனை மீட்க முயற்சி நடந்து வந்தது. 9 அங்குல விட்டம்கொண்ட ஆழ்துளைக்கிணற்றின் 110 அடி ஆழத்தில் இக்குழந்தை சிக்கிக்கொண்டிருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணற்று அருகில் 36 அங்குல விட்டத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால் கடும் பாறைகள் நிறைந்த அந்த பகுதியில் பள்ளம் தோண்டுவதில் சிக்கல் எழுந்தது. eருத்துவர்கள் குழு மற்றும் ஆம்புலன்ஸ் ஒன்றும் 24 மணிநேரமும் சம்பவப் பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டன. குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பல மணிநேரம் ஆகிவிட்ட நிலையில் குழந்தை உடலில் அசைவு இருப்பதை மருத்துவக்குழு உறுதி செய்தது.

ஆழ்துளை கிணற்றின் உள்ளே போதுமான அளவு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. அத்துடன் ஒரு கேமராவும் உள்ளே பொறுத்தப்பட்டு, அதன்மூலம் மீட்புப் பணி கண்காணிக்கப்பட்டது.

குழந்தையின் இயக்கம் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.மீட்பு படையினர், மருத்துவக்குழு, கிராம மக்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் அங்கு கூடி மீட்பு பணிக்கு உதவினர். குழந்தையை பத்திரமாக மீ்ட்க வேண்டும் என்ற பிராத்தனைகளும் நடந்தன.

பல மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த சிறுவன் இருக்கும் பகுதி வரை ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. மீட்பு படையினர் உள்ளே சென்றனர்.

பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு இன்று காலை அவர்கள் அந்த சிறுவனை மீட்டனர். மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதை மறுத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவனை மீட்க பல மணிநேரம் ஆனதால் அப்பகுதி மக்கள் கொந்தளி்படைந்தனர். அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கு போராட்டமும் நடந்தது. உயிரிழந்த சிறுவனுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x