

மரணதண்டனை குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மரண தண்டனைக் கைதிகளின் மறுசீராய்வு மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மரணதண்டனை குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னர் மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள்: "மரணதண்டனை குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்படும். மரண தண்டனைக் கைதிகளின் மறுசீராய்வு மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இருப்பினும், மறுசீராய்வு மனு மூலம் ஏற்கெனவே நிவாரணம் பெற்றவர்கள், மீண்டும் மறு ஆய்வு கோரி மனு தாக்கல் செய்ய முடியாது" என்று தெரிவித்தனர்.