Published : 01 Jun 2019 12:44 PM
Last Updated : 01 Jun 2019 12:44 PM

கேரளாவில் ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு: எப்படி; எதனால்?

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களின் ஓய்வு பலன்களாக 1,600 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

கேரள மாநிலத்தில், 2013 நிதி ஆண்டு வரை பணிக்கு சேர்ந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. மே 31-ம் தேதியான நேற்றுடன் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் அடங்குவர்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பலன்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மாநில அரசு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த 5 ஆயிரம் பேரின் ஓய்வு பலன்களுக்காக மாநில அரசுக்கு ரூ.1,600 கோடி செலவு பிடிக்கிறது.

இதனால் ஏற்படும் காலதாமதத்தால் வட்டித் தொகையை செலுத்த நேரிடும் என்பதால் அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் எப்படி?

இதனிடையே ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் எவ்வாறு ஓய்வு பெறுகின்றனர் என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, நேற்று ஓய்வு பெற்ற பலரும் 1980களில் பணிக்கு சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்காது என்பதால் பள்ளி சேர்க்கை தினத்தை மையமாக கொண்டு கணக்கீடப்பட்டுள்ளது.

மே 31-ம் தேதியை கணக்கிட்டு அவர்களது ஓய்வு முடிவு  செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் உள்ளிட்ட சிலருக்கு கூடுதல் மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டு மே 31-ம் தேதி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஓய்வு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x