Last Updated : 16 Jun, 2019 08:20 AM

 

Published : 16 Jun 2019 08:20 AM
Last Updated : 16 Jun 2019 08:20 AM

மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்: கிராம பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துமாறு கிராம பஞ்சாயத்துத் தலைவர் களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

மோடி கையெழுத்திட்ட கடிதங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துத் தலைவர் களுக்கும் நேரடியாக தரப்பட்டுள் ளது.

அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி எழுதியுள்ளதாவது:

என்னருமை கிராம பஞ்சாயத்துத் தலைவர்களே…வணக்கம். நீங்களும், கிராமங் களில் உள்ள எனது சகோதரர், சகோதரிகள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலை காணப்படுகிறது. விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. நமக்கு அதிக மழை நீரைத் தரும் கடவுளுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அந்த மழைநீரைச் சேகரிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும்.

இதற்காக கிராமசபைக் கூட் டங்களைக் கூட்டி இந்தக் கடிதத்தை கிராம மக்களிடம் படித்துக் காட்டி மழைநீர் சேகரிப் பின் அவசியத்தை எடுத்துக் கூறுங்கள். அதற்கான ஏற்பாடு களை அனைவரும் செய்வதற்குத் தேவையான நடவடிக்கையை எடுங்கள்.

தேவையான இடங்களில் தடுப் பணைகள் கட்டவும், குளங்களை வெட்டவும் ஏற்பாடு செய்யுங்கள். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் கடைப்பிடிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி மோடி கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x