Published : 21 Jun 2019 09:14 PM
Last Updated : 21 Jun 2019 09:14 PM

யோகா தினத்தை கிண்டல் செய்த ராகுல்: ராணுவத்தை அவமதித்து விட்டதாக அமித் ஷா கண்டனம்

சர்வதேச யோகா தினத்தைக் கிண்டல் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 5-வது ஆண்டான இன்று (வெள்ளிக்கிழமை) இதய நலனுக்கான யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம்,  ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

மேலும் இந்தியா முழுவதும் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் யோகா தினத்தை விமர்சிக்கும் விதத்தில் 'புதிய இந்தியா' என்று பதிவிட்டு நாய்கள் யோகாசனம் செய்யும் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை பாஜக ஆதரவாளர்கள் பலரும் விமர்த்தனர்.

பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘காங்கிரஸிடம் எதிர்மறையான சிந்தனைகளே இருப்பது தொடர்ந்து உறுதியாகியுள்ளது. முத்தாலக் சட்டத்தை எதிர்க்கிறார்கள். இப்போது ராணுவத்தையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். இனிமேலாவது அவர்களுக்கு நேர்மறையான எண்ணம் தோன்றட்டும். கடுமையான சவால்களை அவர்கள் வெளியே வந்து எதிர்கொள்ள முடியும்’’ எனக் கூறினார்.

இதற்கு பாஜக செய்தித்தொடர்பாளர் நளின் கோலி கூறுகையில் ‘‘பிரதமர் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வரும்போது, ராகுல் காந்தி தலைமையில் ஒரு புதிய காங்கிரஸ் உருவாகி வருகிறது. அவருக்கு வாழ்க்கை என்பதே ஒரு தொடர்ச்சியான நகைச்சுவையாகவும், தனது செல்ல நாய்க்குட்டியை நினைவுபடுத்தும் புகைப்படத்தை வெளியிடும் வாய்ப்பாகவும் இருக்கும் போலிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல், ராகுலையும், காங்கிரஸையும் பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘காங்கிரஸிடம் எதிர்மறையான சிந்தனைகளே இருப்பது தொடர்ந்து உறுதியாகியுள்ளது. முத்தாலக் சட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இப்போது ராணுவத்தையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். இனிமேலாவது அவர்களுக்கு நேர்மறையான எண்ணம் தோன்றட்டும். கடுமையான சவால்களை அவர்கள் வெளியே வந்து எதிர்கொள்ள முடியும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x