Last Updated : 16 Jun, 2019 07:29 PM

 

Published : 16 Jun 2019 07:29 PM
Last Updated : 16 Jun 2019 07:29 PM

11 மாதங்கள் நீரிலேயே மூழ்கியிருக்கும் கோவா கிராமம்: மே மாதத்தில் வெளியே வரும்போது குவியும் சுற்றுலாப் பயணிகள்

கோவா மாநிலத்தில் உள்ள குர்தி, கண்ணுக்கினிய கடற்கரைகளுக்காகவும் போர்ச்சுகீசிய காலகட்ட கட்டிடங்களுக்காகவும் அறியப்படும் ஒரு சிறிய கிராமம். இங்கு இந்த பருவத்தில் ஒரு வித்தியாசமான காரணத்திற்காக சுற்றுலாவினர் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு முழுவதும் கிராமம் அணை நீரில் மூழ்கியிருந்தாலும், மே மாதத்தில், அதைக் காணும் வகையில் நீர் மட்டத்திற்கு மேலே உயரும்.

நீர் குறைந்து கிராமத்தின் சிதிலமடைந்த பழங்கால சிவன் கோவிலை வெளிஉலகிற்கு எடுத்துக் காட்டும். இதைக் காண  சுற்றுலா பயணிகள் மற்றும் கிராமத்தின் அசல் குடிமக்கள் மே மாதத்தில் இந்த இடத்திற்கு வருவார்கள்,

எஞ்சியுள்ள கோயிலின் மண்டபங்களில் உள்ளூர்வாசிகள் ஒரு பாரம்பரிய விழாவை நடத்துகிறார்கள், இதைக் கண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் அதிகம் மகிழ்ச்சியடைகிறார்கள். பருவமழை பெய்ய தொடங்கிவிட்டால், தாழ்வான கிராமம் மீண்டும் நீரில் மூழ்கிவிடும், அதைத் தேடிவந்தவர்கள் மீண்டும் சோகமாகிவிடுவார்கள்.

600 குடும்பங்கள்

தெற்கு கோவா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள, குர்தி ஒரு காலத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட ஒரு செழிப்பான கிராமமாக இருந்தது.

இருப்பினும், அன்றைய முதல்வர் தயானந்த் பந்தோட்கர், இப்பகுதியில் செல்லும் சீலாலிம் ஆற்றின்மீது மீது, ஒரு அணை கட்டப்போவதாக அறிவித்த பிறகு அதன் பூர்வீகவாசிகள் 1970 களின் பிற்பகுதியில் தங்கள் வீடுகளை "தியாகம்" செய்ய ஒப்புக்கொண்டனர் என்று ஒரு பழைய உள்ளூர்வாசி பிடிஐயிடம் தெரிவித்தார்.

அலுவலக ஆவணப் பதிவுகளின்படி, அணையின் கட்டுமானப் பணி 1976 இல் தொடங்கி 2000ல் நிறைவு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் தியாகம்

பிரகாஷ் குர்டிகார் (60), முன்பு குர்தியின் கிராமவாசி, பழைய சம்பவங்களை நினைவுகூர்கையில், ''1986 வாக்கில், கிராமம் தண்ணீருக்கு அடியில் செல்லத் தொடங்கியது. கோவாவின் நலனுக்காக தங்கள் வீடுகளை தியாகம் செய்த கிராமவாசிகளுக்கு இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். இது எவரும் செய்யக்கூடிய மிகப்பெரிய தியாகமாகும்,''

குர்தியின் குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள வாடென் மற்றும் வால்கினி கிராமங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.

மாநில நீர்வளத் துறையின் நிர்வாக பொறியாளர் கே.கே. ரவீந்திரன் கூறுகையில்,  ''மழைக்காலத்திற்கு முந்தைய மழை காரணமாக கிராமத்தை சுற்றியுள்ள நீரோடைகளில் நிரம்பத் தொடங்கியது. 10 நாட்களுக்கு சரியாக மழை பெய்தால், பின்னர் கிராமம் நீரில் மூழ்கும். இதன் பிறகு 11 மாதங்களுக்குப் பிறகு அடுத்த ஆண்டுதான் இக்கிராமம் வெளியே புலப்படும். இந்த ஆண்டு, கோவாவில் பருவமழை தாமதமாகிவிட்டது. இப்போது மழை பெய்யத் தொடங்கியது,

எனவே, அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்தால், இந்த மாத இறுதிக்குள், குர்தி மறைந்துவிடும், சேலாலிம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது'' என்றார்.

நீரில் மூழ்குவதற்கு முன்பு, கிராமம் சில மணிநேரங்களுக்கு ஒரு தீவாக மாறும் பின்னர் மெதுவாக தண்ணீரின் கீழ் மறைந்துவிடும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x