Published : 22 Jun 2019 07:33 AM
Last Updated : 22 Jun 2019 07:33 AM

ரூ.3 கோடி செலவில் 80 கிலோவாட் சூரிய சக்தி படகு: கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் இயக்கத் திட்டம்

ரூ.3 கோடி செலவில் அமைக்கப் பட்ட 80 கிலோவாட் சூரிய சக்தி படகு விரைவில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

கேரளாவில் உப்பங்கழிகள் அதிகம் என்பதால் நீர்வழிப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது. சிறிய அளவிலான படகுகள் முதல் பெரிய அளவிலான படகுகள் வரை அங்கு பயணிகள் போக்குவரத்துக்காகவும், சரக்கு போக்குவரத்துக்காகவும் இயக் கப்பட்டு வருகின்றன. இதற்காக கேரள அரசு மாநில நீர் வழிப் போக்குவரத்துத் துறை (எஸ்டபிள்யூடிடி) என்ற துறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ரூ.3 கோடி செலவில் 100 பேர் பயணிக்கும் வகையில் மிகப்பெரிய சூரிய சக்திப் படகு உருவாக்கப்பட் டுள்ளது. அரூரில் உள்ள படகு கட்டும் தளத்தில் இந்த படகு நவீனமயமாக உருவாக் கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் இது போக்குவரத்துக்கு விடப் படும் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே 2016-ல் சூரிய ஒளி சக்தியால் இயங்கக்கூடிய சிறிய அளவிலான ஆதித்யா என்று பெயரிட்ட படகு கேரளாவில் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. தற்போது அதை விட மிகப்பெரிய சூரிய ஒளி சக்திப் படகு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படகு வரும் டிசம்பரில் ஆலப்புழையில் பயன்பாட்டுக்கு வரும். படகின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் தகடுகளில் இருந்து படகின் என்ஜினுக்கு சக்தி கிடைக்கிறது. சோலார் பேனல்கள், பேட்டரி, ஜெனரேட்டர் வசதியை இது பெற்றுள்ளது.

இதுகுறித்து எஸ்டபிள்யூடிடி இயக்குநர் ஷாஜி வி. நாயர் கூறும்போது, “முன்பு தயாரித்த ஆதித்யா என்ற சூரிய ஒளி சக்திப் படகு 50 கிலோவாட் சக்தி கொண்டது. இது தற்போது 80 கிலோவாட் சக்தி உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டீசல் என்ஜின் உள்ள படகுக்கு தினமும் ரூ.8 ஆயிரம் செலவழிக்கவேண்டும். ஆனால் இந்தப் படகுக்கு தினமும் ரூ.200 மட்டுமே தேவைப்படும்.

மேலும் இந்த வகைப் படகுகள் காற்று, ஒலி மாசுவை ஏற்படுத் தாது. இரட்டை அடுக்கு கொண்ட தாக இது அமைக்கப்பட்டுள்ளது. கீழ் அடுக்கில் ஏ.சி. வசதியும், புஷ்-பேக் இருக்கை வசதியும் உள்ளது.

மேல் அடுக்கில் ஏ.சி. வசதி கிடையாது. இதை சாப்பிடும் இடமாகவும், உப்பங்கழியின் அழகைக் கண்டுகளிக்கவும் பயன் படுத்தலாம். ஆலப்புழையில் இதை அறிமுகப்படுத்திய பின்னர் இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து எர்ணாகுளத்திலும் இதுபோன்ற படகு பயன்படுத்தப்படும். மேலும் வைக்கம்-எர்ணாகுளம்-கொச்சி இடையே சிறிய அளவிலான அதிவேகப் படகு இயக்கப்படவுள்ளது.

ரூ.1.90 கோடி செலவில் கோட்டயம்-ஆலப்புழகா இடையே மக்கள் போக்குவரத்துக்காக புதிய படகு விடப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x