பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க விலக்கு: பாக். அரசிடம் இந்தியா கோரிக்கை

பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க விலக்கு: பாக். அரசிடம் இந்தியா கோரிக்கை
Updated on
1 min read

கிரிஜிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி  பாகிஸ்தான் வான்வெளி வழியாக விமானம் பறப்பதற்கு விலக்கு  அளிக்கக் கோரி அந்நாட்டு அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் சென்று தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு வந்தது. இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் தடை விதித்தது. அந்த தடையையும் வரும் 15-ம் தேதி வரை நீட்டித்தது.

இதற்கிடையே இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கிவரும் 11 வழித்தடங்களில் 2 வழித்தடத்தை மட்டுமே பாகிஸ்தான் தற்போது அனுமதித்துள்ள மற்ற வழித்தடங்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

ஆனால், கடந்த மாதம் 22, 23-ம் தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  பிஷ்செக் நகருக்கு செல்லும்போது, பாகிஸ்தான் வான்வெளியியில் பறக்க இந்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது அதற்கு பாக் அரசு அனுமதி அளித்தது.

அதேபோல, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் இலங்கை, மாலத்தீவு செல்ல இந்திய வான்வழியாகச் செல்ல அனுமதி கோரினார். அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் நகரில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அப்போது அவர் பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்லவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கோரிககை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்திய விமானம் மாற்றுப்பாதையில் சென்றால் கிரிகிஸ்தான் செல்ல நீண்ட தொலைவும், நேரமும் ஆகும். அதாவது பாகிஸ்தான் வழியாகச் சென்றால், 4 மணிநேரமும், மாற்றுப்பாதையில் சென்றால் 8 மணிநேரம் ஆகும் எனத் தெரிகிறது. இதனால், பாகிஸ்தான் அரசிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in