

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறையை அரங்கேற்றுவதற்காக நிதி வசூலிக்கப்பட்ட வழக்கில் ஏன்ஐஏ கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
2008-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீது, மற்றொரு தீவிரவாத அமைப் பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாஹுதீன் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதி கள் 10 பேர் மீது இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் மஸரத் ஆலம், ஆஸியா அந்த்ராபி, ஷபீர் ஷா ஆகிய 3 பிரிவினைவாதிகளை சிறப்பு நீதிபதி ராகேஷ் ஷ்யால் முன் னிலையில் நடந்த தனிப்பட்ட விசாரணையின்போது என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் மூவரையும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் 10 நாட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.
பிரிவினைவாதிகள் மூவரில் ஆஸியா அந்த்ராபி, ஷபீர் ஷா ஆகிய இருவரும் வெவ்வேறு வழக்குகளில் ஏற்கெனவே சிறை யில் உள்ளனர். மஸரத் ஆலம், ஜம்மு காஷ்மீரில் இருந்து நீதி மன்ற அனுமதியுடன் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டதாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறினார்.