Last Updated : 05 Jun, 2019 04:17 PM

 

Published : 05 Jun 2019 04:17 PM
Last Updated : 05 Jun 2019 04:17 PM

நிபா வைரஸ்: பீதியைக் கிளப்பி விடும் ‘சதிக்கோட்பாட்டாளர்கள்’ இருவர் கைது: கேரள போலீஸ் அதிரடி

கேரளாவில் நிபா வைரஸ் என்பது மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கிளப்பிவிடும் மிகப்பெரிய வதந்தி, தங்கள் மருந்துகளின் விற்பனைக்காக நிபா வைரஸ் தாக்கி வருவதாக கிளப்பி விடுகின்றனர் என்று கூறிய இரண்டு சந்தேக சதிக்கோட்பாட்டாளர்களை கேரள போலீஸார் கைது செய்தனர்.

 

மாவட்ட காவல்துறை உயரதிகாரி எஸ்.சுந்தரம் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு இது தொடர்பாகக் கூறும்போது, நெருக்கடியான காலக்கட்டத்தில் இது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்பியது பொது நலனுக்கு குந்தகம் விளைவிப்பதாக இருப்பதால் கைது செய்திருக்கிறோம் என்றார்.

 

மருந்துக் கம்பெனிகள்தான் நிபா வைரஸ் வதந்தியை தங்கள் மருந்து விற்பனையை அதிகரிப்பதற்காகச் செய்கிறது என்ற தங்களது கருத்திற்கு அரசும் உடந்தைதான் என்பது போல் போலீஸாரிடம் சிக்கியவர்கள் தெரிவிப்பதாக போலீஸார் தெரிவித்தனர், ஆனால் இவர்கள் கூறுவது போல் அல்ல, அரசு நிபா வைரஸுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் மீதான மக்களின் நம்பிக்கையை இவர்கள் கெடுப்பதாகவும் இருக்கிறது என்றார்.

 

ஆகவே இவர்களைக் கைது செய்துள்ளனர்.  மேலும் நிபா வைரஸ் தாக்கத் தொடங்கிய பிறகே இது போன்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன, அதற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இந்தக் கைது என்கிறது கேரள போலீஸ்.

 

ஆனால் நம்பகமான கருத்துக்கள், விமர்சனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

 

கேரள நிபா வைரஸ் தாக்குதல் குறித்த ஆன் லைன் மற்றும் சமூகவலைத்தள கருத்துகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.  ஏற்கெனவே முதல்வர் பினரயி விஜயன், வதந்திகளைப் பரப்புவோர் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நிபா வைரஸையடுத்து நேச்சுரோபதி என்ற பெயரிலும் போலி மருத்துவர்கள் மந்திர சிகிச்சை என்றெல்லாம் அங்கு பேசி வருகின்றனர்.  மேலும் ஒரு சிலர் மருந்தில்லா மருத்துவம் உள்ளது, உணவுப்பத்தியத்தின் மூலம் நிபாவை முறியடித்து விடுவதாகவும் சிலர் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

 

2018-ல் எலிக்காய்ச்சல் ஏற்பட்ட போதும் சமூகவலைத்தளங்களில் இது போன்ற போலி உள்ளடக்கங்கள் வெளிவந்து பெரும் பிரச்சினைகளை கொடுத்ததால் போலீஸார் இந்த முறை வதந்திகள், பொய்பரப்புவோர் மீது கண்காணிப்பு வலையை வீசியுள்ளனர். அதே போல் மக்களிடையே அச்சத்தைக் கிளப்பும் சமூகவலைத்தளங்கள் மீதும் போலீஸார் கண்காணிப்பு வலை விரிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x