

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஷ்வாஸ் காங்கிரஸ், பாஜ கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வாஸ், அமேதி தொகுதியில் ஏற்கெனவே ராகுல் காந்தி என்ற ஒரு நடிகர் இருக்கிறார். இப்போது பாஜக, ஸ்மிரிதி இரானி என்ற மற்றொரு நடிகையை களமிறக்கியுள்ளது என்றார்.
அமேதி தொகுதியைப் பொறுத்த வரை காங்கிரஸ் - பாஜக கட்சிகள் ரகசிய உடன்பாடு ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அமேதி மக்கள் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என தீர்மானித்துவிட்டனர் என தெரிவித்தார்.