அமெரிக்க நிபுணர் ஹாரியைப் போல் செய்து காட்ட கை, கால்கள் கட்டப்பட்டு ஆற்றில் இறக்கப்பட்ட கொல்கத்தா மேஜிக் நிபுணரை காணவில்லை

அமெரிக்க நிபுணர் ஹாரியைப் போல் செய்து காட்ட கை, கால்கள் கட்டப்பட்டு ஆற்றில் இறக்கப்பட்ட கொல்கத்தா மேஜிக் நிபுணரை காணவில்லை
Updated on
1 min read

கொல்கத்தாவில் மேஜிக் நிகழ்ச்சிக் காக கை, கால்கள் கட்டப்பட்டு ஹூக்ளி ஆற்றில் இறக்கப்பட்ட மேஜிக் நிபுணர் கரை திரும்ப வில்லை. இதனால் பார்வையாளர் கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதி சோனார்பூரை சேர்ந்தவர் சன்சல் லகிரி (42). இவர் ‘ஜாதுகர் மாந்த்ரேக்’ என்ற பெயரில் மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். கடந்த 20-ம் நூற்றாண்டின் பிரபல அமெரிக்க மேஜிக் நிபுணர் ஹாரி ஹூடினியின் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றை லகிரி முயற்சி செய்து வந்தார்.

கை, கால்கள் கட்டப்பட்டு நீருக்குள் தள்ளப்படும் ஹாரி ஹூடினி, பிறகு கட்டுகளில் இருந்து விடுபட்டு வெற்றிகரமாக கரைக்குத் திரும்புவார்.

அதுபோன்ற சாகசத்தை கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றில் லகிரி நேற்று முன்தினம் நிகழ்த்த முயன்றார். முதலில் அவரது கை, கால்களை கட்டினர். பின்னர் கைகள் சங்கிலியால் பூட்டப்பட்டன. அதன்பின் லகிரியை கிரேன் மூலம் ஹூக்ளி ஆற்றின் 28-வது தூண் அருகே நீருக்குள் இறக்கிவிட்டனர். அந்தக் காட்சியை ஆற்றின் பாலத்திலும் கரையிலும் ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் லகிரி கட்டு களை அவிழ்த்துக் கொண்டு கரை திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வெகு நேர மாகியும் லகிரி கரை திரும்ப வில்லை. இதனால் பார்வையா ளர்கள் பதற்றமடைந்தனர். உடனடி யாகப் போலீஸுக்கு தகவல் தெரி வித்தனர். போலீஸார் மற்றும் பேரி டர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து லகிரியை ஆற்றில் தேடினர். 4 நீர்மூழ்கி வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் லகிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருள் சூழ்ந்ததால் நேற்று மாலை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை தேடும் பணி மீண்டும் தொடங்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in