திசை மாறியது ‘வாயு’ புயல்; குஜராத்தில் கரையை கடக்காது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

திசை மாறியது ‘வாயு’ புயல்; குஜராத்தில் கரையை கடக்காது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு’ புயல் திசை மாறியதால் குஜராத்தில் கரையைக் கடக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சவுராஷ்டிரா கடல் பகுதியையொட்டி அந்த புயல் பயணிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் ‘வாயு’ புயல் 340 கிலோமீட்டர் தூரத்தில் மைய மிட்டுள்ளது. அது படிப்படியாக நகர்ந்து இன்று (ஜூன் 13-ம் தேதி) பகல் 12 மணிக்குப் குஜராத் கடல் பகுதியில் கரையை கடக்கவுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் முதல் 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் வசிக்கும் 2.15 லட்சம் மக்கள் வெளியேற் றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லா மல் மோர்பி, ஜாம்நகர், ஜுனகத், தேவ்பூமி-துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர், கிர்-சோம்நாத் ஆகிய 10 மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

கடலோரக் காவல்படை, ராணுவம், விமானப்படை, கடற் படை, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடற் படை படகுகள், கப்பல்கள் தயாராக  வைக்கப்பட்டுள்ளன.

புயல் நிவாரணம் மற்றம் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 46 குழுக் கள், மாநில பேரிடர் மீட்புக் குழு வைச் சேர்ந்த 11 குழுக்கள், சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 13 குழுக்கள், ராணுவத்தைச் சேர்ந்த 11 குழுக்கள், எல்லைப் பாது காப்புப் படையைச் சேர்ந்த 2 குழுக்கள், கடற்படையைச் சேர்ந்த 300 கமாண்டோ வீரர்கள் என ஏராளமான குழுவினர் குஜராத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘வாயு’ புயல் திசை மாறி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்காது, எனினும் குஜராத்தின் வேரவல், துவாரகா மற்றும் போர்பந்தர் ஆகியவற்றை ஒட்டியப்பகுதிகளில் கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in