Last Updated : 02 Jun, 2019 01:11 PM

 

Published : 02 Jun 2019 01:11 PM
Last Updated : 02 Jun 2019 01:11 PM

கோட்சேவுக்கு நன்றி: காந்தி சிலையை அகற்றுங்கள், ரூபாய் நோட்டிலிருந்து நீக்குங்கள்- பெண் ஐஏஎஸ் அதிகாரி ட்வீட்டால் சார்ச்சை

மும்பையைச் சேர்ந்த பெண் ஐஏஎஎஸ் அதிகாரி ஒருவர், தேசப்பிதா மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் காந்தி சிலைகளை அகற்றுங்கள், அவர் பெயர் வைத்துள்ள இடங்களில் பெயரை மாற்றுங்கள், ரூபாய் நோட்டில் அவரின் புகைப்படத்தை நீக்குங்கள் என்று ட்வீட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிதி சவுத்ரி என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இவர் மும்பை மாநகராட்சியில் துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம் 17-ம் தேதி நிதி சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் " மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் வழக்கத்தில் இல்லாதது. அவரின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்க வேண்டிய நேரம், உலகில் காந்தியின் சிலைகள் அனைத்தும் அகற்றப் பட வேண்டும், அவரின் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை ஆகியவற்றுக்கு வேறு பெயர் வைக்க வேண்டும். மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும். காந்தியை 30.01.1948-ல் கொன்ற கோட்சேவுக்கு நன்றி " எனத் தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட் பெரும் சர்ச்சையானதையடுத்து, அந்த ட்வீட்டை நிதி சவுத்ரி நீக்கிவிட்டார்.

இந்த ட்விட் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியை அவமானப்படுதியும், கோட்சேவை புனிதப்படுத்தியும்  பேசிய அந்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், தான் செய்த ட்வீட் திரிக்கப்பட்டுள்ளது அவ்வாறு கூறவில்லை என்று அந்த ஐஏஎஸ் அதிகாரி நிதின் சவுத்ரி மறுத்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறுகையில், " மகாத்மா காந்தியின் சத்திய சோதனைதான் என்னுடைய விருப்பமான புத்தகம். என்னுடைய கருத்துக்கள் திரிக்கப்பட்டுவிட்டன.

என்னுடைய ட்விட்டரை எடுத்து ஆய்வு செய்யுங்கள், கடந்த சில மாதங்களாக என்னுடைய ட்விட்கள் அனைத்தும் என்னைப் பற்றிமட்டுமே இருக்கும் யார் குறித்தும் இருக்காது. ஆனால் இப்போது நான் கூறாத கருத்தை கூறுவதாக சொல்வது வேதனையளிக்கிறது.  

நான் காந்தியை ஒருபோதும் மரியாதை குறைவாக  பேசியதில்லை " என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x