Last Updated : 05 Jun, 2019 10:09 AM

 

Published : 05 Jun 2019 10:09 AM
Last Updated : 05 Jun 2019 10:09 AM

கர்நாடக மஜத தலைவர் விஸ்வநாத் ராஜினாமா: காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் விஸ்வநாத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கர்நாடகாவில் காங்கிர ஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கட்சியின் கர்நாடக மாநில தலைவராக இருந்த குமாரசாமி கடந்த ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, மூத்த தலைவர் விஸ்வநாத் மஜதவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்த முள்ள 28 தொகுதிகளில் இந்த கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வென்றதால் இரு கட்சிகளின் தலைமைக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதேபோல குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கும் நெருக் கடி ஏற்பட்டது. இந்நிலையில் கர் நாடக மஜத தலை வர் விஸ்வநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்துள் ளேன். கட்சியை சரியான முறையில் நடத்தி செல்லும் அளவுக்கு எனது குரலுக்கு மரியாதை கிடைக்க வில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸின் தலைவர்களும் என் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை.

காங்கிரஸ் - மஜத கூட்டணியில் நிறைய பிரச்சினைகள் இருக்கின் றன. இதை சரிசெய்வதற்காக சித்தராமையா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப் பட்டது. ஆனால் அந்த குழுவே சரியாக செயல்படவில்லை. சித்த ராமையா தன் சுயநலத்துக்காக காங்கிரஸை பயன்படுத்தி வருகி றார். காங்கிரஸ் மாநில தலைவரான தினேஷ் குண்டுராவ் சித்த ராமையாவின் கைப்பாவையாக செயல்படுகிறார்.

மஜத தலைவரான என்னையோ, காங்கிரஸ் தலைவரான தினேஷ் குண்டுராவையோ ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக சேர்க்க வில்லை. ஒருங்கிணைப்பு பணியை செய்ய வேண்டிய சித்தராமையா, ஆட்சிக்கு தொல்லைக் கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இதனை வெளிப்படையாக நான் குற்றம்சாட்டியபோதும் காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா துமக்கூருவில் தோல்வி அடை வதற்கு காங்கிரஸ் மாநில தலை வர்களே பிரதான காரணம். முத லில் தேவகவுடாவுக்கு மைசூரு தொகுதியைதான் கோரினோம். ஆனால் காங்கிரஸார் அதை தர மறுத்து துமக்கூருவை கொடுத்தார் கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x